நான் எனப்படும் நான் :028
003:
இந்தியா முழுக்க பயணித்திருக்கிறீர்களா ?
ஆம். அனைத்து மாநிலங்களுக்கும். Car இல். Single Drive. Maruthi 800 இல் ஆரம்பித்து, Honda City வரை. லட்சக்கணக்கான Kms. பல சூழ்நிலை, வாகன, மனித, சமுதாய அனுபவங்கள். அவ்வளவும் உள்ளே எரிபொருளாக அசைபோட்டு ஊர்கின்றன.
இந்தியாவை போல ஒரு அழகான தேசம் இருக்க முடியாது. ஒவ்வொரு 600 Kms க்கும் சாதி, மதம், மொழி, உணவு, உடை, பேச்சு, பழக்க வழக்கம், கடவுள், நதி, நிலம், மழை, வெய்யில், காற்று, நீர் … அனைத்தும் மாறும். புகைப்பட ஆர்வலர் நீங்கள் எனில் இந்தியாவை போல Variety காண முடியாது ! சட்டென குளிரவும், சட்டென வியர்க்கவும் இந்தியாவால் மட்டுமே முடியும் !
நான் இன்னமும் அதிசயப்பது .. காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்கள். அங்கே ஒரு witness ஆக பயணித்தால் .. உலகம் வேறு அழகு. அங்கே உள்ள அழகை கண்டுவிட்டு திரும்பி விட்டால் தான் அவை அழகு. அங்கேயே சென்று அனைத்தையும் தன்னுடையதாக்கி வாழ முயற்சிப்பது சரியானதல்ல என்பது எனது பார்வை !
North East பகுதிகள் ” இவை இந்தியாதானா ? ” என்று கேட்பதை போலவே இருக்கும். அவர்களும் நம்மை ” நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா ? ” என்று சிரித்துக்கொண்டே கேட்பார்கள். அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யவில்லை எனில் சில நில உணர்வுகள் தம்மை அரசாங்கத்தில் இருந்து விடுவித்து கொள்ள விரும்புவதை யாராலும் தவிர்க்க முடியாது !
Gujarat மனிதர்கள் மகிழ்வானவர்கள். இனிப்பும், தேநீருமாக அவர்களின் பேச்சுக்கள் சுவையூட்டி கொண்டே இருக்கும். மும்பையின் பரபரப்பு, Delhi யின் புகைச்சல், பெங்களூரின் மாற்றங்கள், கொல்கத்தாவின் பழமை, சென்னையின் வியர்வை, கிராமமும் நகரமும் அற்ற ஹைதராபாத், என்னவோ ஒரு மௌனத்துடன் போபால், மிக நேர்த்தியாக ஆனால் எதையோ சண்டிகர், நேர்த்தியும் நேரத்தியற்றதுமாக பாண்டி, சீன முகங்களை ஞாபகம் கொள்ள வைக்கும் வட கிழக்கு நகரங்கள், தன்னை என்னவென்றே சொல்ல இயலாத .. இந்திய பாகிஸ்தான் எல்லை கிராமங்கள், இன்னமும் கிராமங்களாக இருக்கும் உத்தர பிரதேச நகரங்கள் … இந்தியா ஒரு பழமையான Modern Painting. புரிந்தும் புரியாமலும் நிற்கும் இந்த நகரங்கள் காலத்தின் சாட்சிகள் !
பயணங்களில் இந்த Jay வேறு விதம். ஆம். எவ்வித அடையாள இணைப்பும் இல்லாத, இதுவே நான் என்று சொல்லமுடிந்த யதார்த்தவாதி அவன். அந்த அவனை இப்போது நான் வசிக்கும் வாழ்க்கையில் கொண்டு வந்திருப்பது தான் நான் வாழ்ந்த வாழ்வின் சாட்சி !
பயணிப்போம்.





