நான் எனப்படும் நான் : 031
#WhoisJay ;
006
பேசிக்கொண்டே இருக்கும் மக்களில் நிறைய வகை. மூன்றாம் வகையை கவனிப்போம்.
மூன்றாம் வகை ;
தன்னை பற்றி, தனக்கு கிடைக்க வேண்டியவற்றை பற்றி, தனக்கு கிடைக்காதவற்றை பற்றி, தான் தோற்றதை , வெற்றி பெற்றதை, புத்திசாலித்தனமாக முடிவெடுத்ததை, அவமானப்பட்டதை, தவறு செய்ததை … சொல்லும் வகை இந்த மக்கள். இவர்களுக்கு தேவை ஒரு set காதுகள் மட்டுமே. எதிரில் இருப்பவரின் நிலை என்ன ? அவர்களுக்கு நாம் பேசுவதில் விருப்பம் இருக்கிறதா ? அல்லது நமக்காக அவர்கள் கேட்கிறார்களா ? எதையும் யோசிக்காது பேசிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் தோன்றுவது ஒன்றே ஒன்று தான் …
” சரி. நான் கேட்கிறேன். நான் இல்லையெனில் என்ன செய்வார்கள் ? ”
அவர்கள் திறமைசாலிகள். யாரையாவது கண்டுபிடித்து பேசுவார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பேசிமுடித்த பின் ஒருவித திருப்தியோடு செல்கிறோமே .. நாம் பேசியதை கேட்டவர் திருப்தியோடு செல்கிறாரா என்று கவனிக்கிறோமா ? எவ்வளவு பெரிய வன்முறை இது ! ஒரு மனிதனை அழைத்து அவன் மனதில் unrest ஏற்படுத்தி, நாம் relieved ஆக செல்வது !
கொடுமை.
💐💐💐
நான்காம் வகை ;
எந்த வகையிலும் நம் வாழ்க்கைக்கு உதவாத பேச்சுகள் பேசும் மனிதர்கள். இப்படி மனிதர்களை கவனிக்கும்போது .. எனக்குள் ஒரு கேள்வி எழும்.
” எப்படி இவர்களுக்கு.நேரம் கிடைக்கிறது ? ”
நடிகை நடிகர் என்று ஆரம்பித்து பக்கத்து எதிர்த்த அடுத்த தெரு வீட்டுக்காரர் வரை நடப்பதை பேசுவது இவர்களால் மட்டுமே முடியும். இவர்களால் காலையில் சீக்கிரம் எழமுடியாது – ஆனால் – பிரதமர் செய்யும் தவறை சொல்லி சிரிப்பார்கள் ! உடலை healthy யாக வைக்க முடியாது – ஆனால் – ஒரு நிர்வாகமே தவறு என்பார்கள். ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு எல்லை நியாயங்கள் பற்றி பேசுவார்கள்.
இவர்களை பற்றி நான் யோசிப்பது உண்டு.
” வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடாது என்று முடிவெடுத்தால், எந்த இலக்குமின்றி வாழ நினைத்தால், அனைத்து வியாதிகளுக்கும் புகலிடம் கொடுக்க நினைத்தால் .. இந்த மனிதர்களை நண்பர்களாக்கிக்கொண்டு வாழ வாழவேண்டும். ”
இப்படி நண்பர்கள் என்னுடன் இப்போது இல்லை. எப்போதும் இல்லை. படிக்கும் உங்களில் யாராவது இப்படி இருந்தால் இப்போதே எம் நட்பில் இருந்து விலகி விடுங்கள். உங்கள் அழைப்புக்கு நான் கிடைக்க வாய்ப்பில்லை.
வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்ல இயலா பேச்சு என்ன பேச்சு ? அதை ஏன் பேசவேண்டும் ? Well… நீங்கள் பேசலாம். May be நீங்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். நான் அப்படி அல்ல. என் வாழ்க்கை என் கையில் என்பதால் இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை !
💐💐💐
பயணிப்போம்.