நான் எனப்படும் நான் : 033
#WhoisJay ? ;
008:
சமீபத்தில் அந்த வயதான மனிதரை சந்தித்தேன். மெதுவாக ஓடும் fan அந்த வீட்டின் அமைதியை அழகாய் எடுத்து சொல்கிறது. வார்த்தைகளை அளந்து பேசும் மனிதர் அவர். ” பத்து நிமிடம் தான் பேச முடியும் ” என்று என்னை அறிமுகப்படுத்தியவருடன் சொல்லியபடி நான் சந்திக்க .. ஒன்றரை மணி நேர சந்திப்பாக அது மாறியது. நேர்மையாய் வாழ்ந்த 87 வயது அனுபவங்களை பகிர்வது என்றால் என்ன சாதாரணமான ஒன்றா ?
” அப்போதெல்லாம் சாலை வசதி கிடையாது. ஆகவே எங்கேயும் cycle அல்லது தொடர் நடை தான். அதுதான் என்னை இந்த வயது வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் வைத்திருக்கிறது. நடைக்கு நிகர் எதுவும் இல்லை ! ” என்று ஆரம்பிக்கும் அந்த அனுபவ பேச்சு நிதானத்தின் அழகான example.
” மூன்று பெண்களும் well settled. நானும் மனைவியும் இங்கே. நம் பிள்ளைகள் என்றாலும் …யார் வீட்டிலும் போய் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. Be Independent / Be Dependant இரண்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. Independent – நம்மால் முடிந்ததை நாமே செய்ய வேண்டும். Dependent – முடியவில்லை எனில் கேட்கவும் வேண்டும். இரண்டும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை அழகு. என்னால் முடியும் என்ற இருமாப்பும் தேவை இல்லை. என்னை ஏன் யாரும் கவனிக்கவில்லை என்ற ஏக்கமும் தேவை இல்லை ! ”
வார்த்தைகள் போதி மரங்களாய் எனக்கு மேல் ! மௌன புத்தனாய் என் உடல்.
” இதுவரை கடன் கேட்டது இல்லை. நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். 60 வருடமாக tax proper ஆக file செய்கிறேன். வாழ்க்கையில் யாரும் நம்மை கேள்வி கேட்கும் அளவிற்கு வாழக்கூடாது என்கிற பக்குவம் சிறு வயதிலேயே வந்துவிட்டது. ”
60 வருடமாக ஒழுங்காக Tax கட்டும் மனிதர்களுக்கு இந்த அரசாங்கம் ஏன் ஒரு Award வழங்க கூடாது ?
” காலையில் ஒன்றரை லிட்டர் வெந்நீர், அதில் கொஞ்சமா தேன், எலுமிச்சை சாறு தினமும் பருகுகிறேன். மதியம் ஒரு சாதாரண meals. இரவு ஏழு மணிக்கு மேல் எதுவும் உண்பது இல்லை ! ஆகவே உடல் என்னை எந்த தொந்தரவும் செய்வதில்லை. உடலை ஒழுங்காக வைத்துக்கொண்டால் … எந்த வயதிலும் சிரித்து வாழமுடியும் ”
என்ன ஒரு யதார்த்தம் பேச்சில். Kirthika Tharan ஒருமுறை எம் அப்பாவிடம் பேசிவிட்டு சொன்னார் …. ” Common man Diet ஒன்று விரைவில் ஆரம்பிக்கிறேன் ” அது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
” நாம் movement இல் இருக்கும் வரை youth தான். Movement இல்லை எனில் old தான் ” என்று சிரிக்கும் அவரை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
” நேர்மை, நல்ல உழைப்பு, நிம்மதியான தூக்கம், முடிந்த அளவிற்கு பிறர்க்கு உதவுதல் … இது போதும் வாழ்க்கைக்கு ! மற்றவை எல்லாம் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கும். நமக்கான எல்லைக்குள் நமக்கான நிதானம் இருக்க வேண்டும். நமக்கு வெளியே நடக்கும் விடயங்களில் இரு மடங்கு நிதானம் வேண்டும் ! ”
Who is Jay யின் பல பதில்கள் அவரின் பேச்சில். நம் அலைவரிசையில் இருக்கும் ஒரு மனிதரின் பேச்சை அமைதியாக கேட்பது நமக்குள் நாமே பேசிக்கொள்வது போல ! அப்படி ஒரு பொழுது அது.
💐💐💐
பயணிப்போம்.