நான் எனப்படும் நான் : 040
#WhoisJay ; 015
” Hate me for What I am than Love me for What I am not ! ”
💐💐💐
எம்மை நோக்கி வந்த சில கேள்விகளை இங்கே பதிலுடன் பகிர்கிறேன்.
” உங்களிடம் நீண்ட நாள் தொடர்பில் இருப்பவர்கள் மிக குறைவாக இருக்கிறார்களே ? ”
1. முதலில் … ஏன் அதிகமாக இருக்க வேண்டும் ? இந்த உலகில் நெருங்கிய நட்புக்கள் குறைவாகவும், நட்புக்கள் அதிகமாகவும், ‘ அப்போது பேசியதுண்டு ‘ மனிதர்கள் அதிகமாகவும் … தான் இருக்க கூடும். இருக்க வேண்டும். நெருங்கிய நட்புக்கள் மட்டுமே உடன் வலம் வர முடியும். மற்றவர்களால் முடியாது. சரி .. யார் இந்த நெருங்கிய நட்புக்கள் ?
என்னை நானாக கவனித்து – என்னை வெறுப்பவர்களாக கூட இருக்க கூடும். வெறுப்பவர்களா ? அப்புறம் எப்படி நெருக்கமாக ? ஆம். இதுதான் நான் என்று புரிவது முதல் பகுதி. அதில் நல்லது கெட்டது களை அப்படியே ஏற்பதும், அதில் கெட்டதுகளை வெறுப்பது அல்லது விரும்பாததுமாகவே … நெருங்கிய நட்பு இருக்க முடியும். நிறைய மனிதர்கள் ” நெருங்கிய நட்பு ” எனில் சொல்வதை அப்படியே ஏற்கும் நட்பு / அல்லது / நம்மை விரும்பும் நட்பு என்று குழம்பி குழப்பி கொள்ளக்கூடும் ! அப்படி அல்ல .. ” இதுதான் நான் ” என்பதில் என்னை பிடித்த, பிடிக்காத பகுதிகளுடன் என்னுடன் பயணிப்பவர்கள் தான் … எம் நெருங்கிய நட்புக்கள் !
நான் ” என்னவாக இல்லையோ ” அதை எதிர்பார்த்து வருபவர்கள் என்னுடன் நீண்ட நாள் பயணிக்க வாய்ப்பில்லை ! அப்படி வருபவர்கள் விரும்பும் ஜெய் யாக நானும் இருக்க விரும்புவதில்லை !
💐💐💐
சட்டென மாறுகிறீர்களோ ?
இல்லை. சரியும் தவறும் நொடிகளில் மாறிப்போகும் வாய்ப்புள்ள உலகம் இது. அப்படி எம் பார்வையில் ஒரு ” சரி ” திடீரென்று “தவறாக ” மாறினால் .. சில மன ஆராய்வுகளுக்கு பின் Bye தான் !
💐💐💐
திடீரென்று கோபம் வருமோ ?
நன்றாக கவனித்தால் .. சில முறைகள் மெதுவாக, இதமாக, பதமாக ” எம் பார்வைகளை ” சொல்லும் பழக்கம் எனக்குண்டு. அதில் சரியாகவில்லை எனில் .. கோபம் என்பது என் வழிமுறையில் ” வெளியேறி விடு ” என்பதே !
💐💐💐
உங்களின் புத்தகத்தில் உள்ள Traveller Jay தான் மிகவும் பிடிக்கிறது. மற்ற Jay எல்லாம் ok தான். Traveller Jay மீண்டும் எப்போது ?
எனக்கும் பிடித்த ஒரே Jay அவன்தான். 2019 ன் பின்பாதி மிகவும் busy யாக மாறி இருக்கிறது. நான் Miss செய்யும் ஒரே version இந்த Traveller Jay தான். என்ன செய்வது ? ” உடனே செய்யவேண்டியவற்றால் ” – யாம் மிக விரும்பும் ” ஒருவனை ” நான் இழந்து கொண்டே இருக்கிறேன் !
💐💐💐
( குறைவான ஒளியில் எடுத்த புகைப்படம். ஆகவே … ☺️☺️ )