நான் எனப்படும் நான் : 045
#WhoisJay ; 020
குழந்தைகள் பெற்றிருக்கும் வரம் – சில நொடிகளில் பெரியவர்களை Scan செய்து, தங்களின் மனதில் அவர்களுக்கு Yes / No சொல்லிவிடுவார்கள்.
நான் சர்க்கரை மற்றும் சர்க்கரை சார் பொருட்கள் சாப்பிடுவதில்லை என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் கேட்டுக்கொண்டே இருப்பான் ” ஒரே ஒரு Sweet ? ஒரு Ice Cream ? ” … நான் சொல்லும் No வை ரசித்து சிரிப்பான். ” புரியுது. சாப்பிட முடியலையே ன்னு நினைக்கறது புரியுது ” என்று பலமாக சிரிப்பான். ஆம். அங்கே தான் குழந்தைகள் நிற்கிறார்கள். அவர்கள் நம்மை ஆளட்டும் என்னும் பக்குவம் வேண்டும். அந்த Teasing ஐ ரசிக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு அவர்களை ” சும்மா இரு ” என்று மிரட்ட ஆரம்பித்தால் … ” யோவ் போய்யா ” என்று மனதில் சொல்லிவிட்டு விலகுவார்கள். பெரியவர்கள் என்ற tag உடன் நாம் அனாதையாக இருக்க வேண்டியது தான் !
என் தங்கை மகன் எனக்கு ஒரு audio அனுப்பி இருந்தான். ” வருவீங்களா இல்லை வரேன்னு சொல்லிட்டு இருப்பீங்களா ? ” எவ்வளவு துல்லியமான கேள்வி அது ? நம் Behvaior ஐ எவ்வளவு அழகாக எடை போட்டிருக்கிறான் அவன் ? குழந்தைகளின் உலகில் Promise தான் வேதம். அதை follow செய்தால் நீங்கள் சாமி. இல்லை எனில் நீங்கள் அரக்கன்.
குழந்தைகளை மட்டும் ஏற்றி கொண்டு ஒரு Drive போகும் idea இருக்கிறது. ( அதற்கு Drive with Divine என்று பெயர் சொன்னவன் தான் படத்தில் இருக்கிறான் ). அந்த Drive இல் எந்த Rules ம் கிடையாது. குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும். அவர்களின் சரி தவறை அவர்கள் மனதார பேச வேண்டும். அவர்களின் ஏக்கங்கள் ஆசைகள் வருத்தம் கோபம் எல்லாம் பேசி தீர்க்க வேண்டும். 500 Kms அப்பால் இருந்து அப்பா அம்மா விற்கு அவர்கள் சொல்ல வேண்டியதை video call இல் சொல்ல வேண்டும். அப்படி ஒரு Drive ஆக இருக்க வேண்டும் அது ! பின்னே .. ? குழந்தைகள் உடன் பயணிக்கும் போது …அவர்கள் தானே Divine ?