நான் எனப்படும் நான் : 055
#WhoisJay ; 030
அது எப்படி உங்களால் நேரிலும், புகைப்படங்களிலும் … சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது ?
ஆரம்ப கால புகைப்படங்களில் நான் சிரித்த முகமாக இருப்பது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வித இறுக்கமான முகம் தான் அங்கே இருக்கும். அது என்னவோ தெரியவில்லை … அப்போதெல்லாம் Camera முகத்திற்கு முன் வந்துவிட்டால் … ஒருவித இறுக்கமும் முகத்தில் உடன் வரும். அதேபோல பார்வை Camera வை பார்க்காமல் வேறு எங்கோ செல்லும். பொதுவாக குழு புகைப்படங்களில் இடது அல்லது வலது பக்க கடைசி ஆளாகவே நான் இருப்பேன். ( இப்போதும் கூட அது தொடர்கிறது ! )
ஒரு காலக்கட்டத்தில் எனது புகைப்படங்களை பார்த்தால் எனக்கு ” நான் ஏன் இப்படி இறுக்கமாக முகத்தை வைத்திருக்கிறேன் ” என்று தோன்றும். ஆனால் அப்போதும் நான் உணராத ஓர் விஷயம் .. ” அகத்தின் அழகு தான் முகத்தில் “. ஆம். என் அகம் அப்போதெல்லாம் கொஞ்சம் இருக்கமாகவே இருந்திருக்கிறது.
நான் சந்தித்த Monks / துறவிகள் தான் எம் மனதினை மிக இலகுவான ஒன்றாக மாற்றினார்கள். சில கதைகளை கொண்டு, சில பயிற்சிகளை கொண்டு, சில புத்தகங்களின் மூலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் முதலில் அப்படி வாழ்ந்து … எம் அக இறுக்கத்தை அவர்கள் மிக எளிதாக கரைத்து வெளியே எறிந்தார்கள். அங்கே தான் நான் சிரிக்கவே தொடங்கினேன்.
பிறகு எம் படிப்பு என்னுள் வந்தது. அது என்னை இன்னும் இலகுவாக மாற்றியது. அதாவது இலகுவாக இருப்பதை படிப்பாகவே சொல்லி கொடுத்தது. அதே காலகட்டத்தில் நான் படித்த புத்தகங்கள் என்னை செதுக்க ஆரம்பித்து இருந்தன. புத்தகங்கள் அனுபவங்களான காலகட்டம் அது !
பிறகு வந்த புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு சிரிப்பு என்னுடன் இருக்கும். அந்த சிரிப்பு என்னுடன் இயற்கையாகவே ஆரம்பித்து, இயல்பாகி, பின் என்னுள்ளே பகுதியாய் கலந்த ஒன்று. ( plastic சிரிப்பு எனக்கான ஒன்று அல்ல ! ).
சில பேர் என்னிடம் கேட்டதுண்டு. ” உங்களுக்கு கோபமே வராதா ? “. சிரித்து கொண்டே நான் சொல்வது .. ” கண்டிப்பாக வரும். என்ன – மற்றவர்கள் அதில் இருந்து வெளியே வரும் வேகத்தைவிட எம் வேகம் அதிகமாக இருக்கும். ” .. ஆனால் … அந்த கோபம் வர காரணமாக இருந்த விடயங்களை பாடமாக எடுத்துக்கொள்வதில் இருந்து நான் வெளிவருவது இல்லை. அவை என்னுடன் பயணிப்பவை – காலம் முழுக்க !
சமீபத்தில் எம் நட்பு ஒருவர் நேரில் திருநீறு கொடுத்தார். ” சிரித்து கொண்டே புகைப்படங்கள் இருப்பதால் .. கண் பார்வை படும் … அம்மாவை சுற்றி போட சொல்லுங்கள் ” என்று சொன்ன அவரையே எம் நெற்றியில் நீறு இட சொன்னேன். ( நான் நீறு இடுவதில்லை. எம் செயல்களே எம் Representatives ! ). இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அன்பிற்கு மரியாதை செலுத்த நான் தவறுவதில்லை.
இறக்கும் வரை இந்த சிரிப்பு தொடரும் என்றே நம்புகிறேன். உறவுகள் வட்டத்தில் அவ்வப்போது இந்த சிரிப்பிற்கு சில இடையூறுகள் வந்த போதும் சிரித்தே கடக்கிறேன். ஆம். வேறென்ன கொண்டு போகப்போகிறோம் நாம் – இந்த சிரிப்பு கொடுக்கும் நினைவுகளை தவிர !
( உங்களின் சிரித்த முகங்களை பதிவிடுங்களேன். இணைந்து .. மகிழ்வோம் )