நான் எனப்படும் நான் : 056
#WhoisJay ; 031
உலகில் குடைகள் உண்டு. குடைகளுக்குள் உலகங்கள் இல்லை. குடைகள் ஓர் சிறு இடைவெளிகள். நிதானமாய் மழை ரசிக்க, வெயில் தவிர்க்க எழும் கதவற்ற வெளிப்படை மறைப்பு !
💐💐💐
எம் வாழ்வின் நடைபயணத்தில் உடன் பயணிப்போர் புரிந்து கொள்ள வேண்டியவற்றை அவர்களிடமே நான் சொல்லிவிடுவதுண்டு. சிலவற்றினை இங்கே பகிர்கிறேன்.
“உங்களுக்கும் எனக்குமான இடைவெளியில் தான் நம் உறவு இருக்கிறது. இடைவெளிகள் தகர்க்கப்பட்ட உறவுகள் உடன் வருவதில்லை. உங்கள் வச உலகத்தில் நீங்கள் இளைப்பாருங்கள். எம்மையும் இளைப்பாற விடுங்கள். ஒரு படுக்கை இரு போர்வை தான் யதார்த்தம். ”
” உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு உலகம் இருக்கும். அதில் நீங்கள் தலை வாற மாட்டீர்கள். முகம் திருத்த மாட்டீர்கள். நேர்கோட்டில் உடை அணிய மாட்டீர்கள். Attention இல் பேச மாட்டீர்கள். கண்ணாடி பார்த்து சிரிப்பீர்கள். அந்த உங்களுக்கேயான உலகத்திற்குள் நான் வரமாட்டேன். அதே போன்ற எம் உலகத்திற்குள் நீங்களும் வராதீர்கள் ”
” எனக்கே எனக்கான உலகில் எனக்கு வருகை பதிவேடுகள் கிடையாது. நான் யாருக்கும் எதற்கும் attendance காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. Present Absent எல்லாம் எனக்குள் நான் வைத்துக்கொள்ள விரும்பா பக்கங்கள். இன்றைய தினத்தை வாழ்ந்து, சிரித்து மறைவதே எம் நோக்கம். இங்கே நேரக்கணக்கில் attendance எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறக்கூடும் ”
💐💐💐
உலகில் குடைகள் உண்டு. குடைகளுக்குள் உலகங்கள் இல்லை. குடைகள் ஓர் சிறு இடைவெளிகள். நிதானமாய் மழை ரசிக்க, வெயில் தவிர்க்க எழும் கதவற்ற வெளிப்படை மறைப்பு !
💐💐💐