நான் எனப்படும் நான் : 058
#WhoisJay ; 033
💐💐💐
The Sharpest You ;
ஒரு நாளில் பல நேரங்களில் நாம் சோர்வாக இருக்கக்கூடும். அது இருக்கட்டும்.
அதே நாளில் நாம் Sharp ஆக, Focused ஆக, நமக்குள் ஒருமித்து இருப்போமே அதுபற்றி யோசித்தது உண்டா நீங்கள் ?
அப்படிப்பட்ட எம் கணங்களை இங்கே பகிர்கிறேன். உங்களின் கணங்களை நீங்களும் பகிரலாம். யாரோ ஒருவருக்கு கண் திறக்கும் பதிவாக இது அமையலாம்.
1. நன்கு தூங்கி எழுந்த பின் ;
தூக்கம் மனித சுகம். என்னை கேட்டால் இணைதல், உண்ணுதல், வெற்றி அடைதல் இவை அனைத்தையும் விட அழகான சுகம் … தூக்கம். தூக்கம் என்கிற உலகில் ஜாதி மதம் இல்லை (CAA NPR NRC … இல்லாத அழகான உலகம் அது ! ). செலவு இல்லை. ஆனால் அனைத்தும் வரவு. அனாவசிய பேச்சு இல்லை. எம் கனவுகளை நான் மட்டுமே வாங்கும் ஓர் அழகிய உலகம் அது. அங்கே நான் ஒரு witness ஆக இருப்பதால் எனக்கும் எந்த Pressure ம் இருக்க போவதில்லை.
இதனால் தானோ என்னவோ எம் The Sharpest Me தூக்கத்திற்கு பின் கிடைக்கிறது. அதிலும் சரியான அளவு தூக்கம் கிடைக்கும் நாட்கள் எல்லாம் எம் வரம். முக்கிய சந்திப்புகளை ஒரு நல்ல தூக்கத்திற்கு பின் சந்திக்க நான் விழைவது உண்டு. முக்கியமான முடிவுகளை நான் தூக்க விழிப்பிற்கு பின்னே தான் எடுக்கிறேன்.
2. படித்தல் ;
வாசித்தல் இன்னொரு அழகான அநுபவம். ‘ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் உன் பழைய உன்னை இழக்கிறாய் ‘ என்பது எம் பார்வை. வாசித்தல் எனபது உள்ளும் புறமும் தன்னையே சுத்தப்படுத்தி கொள்ளும் நிகழ்வு. வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டும் என்பதை ஏற்படுத்துவதே அதன் போதை !
ஒரு புத்தகம் முழுவதும் நான் படிப்பது என்னை அசைக்கும் ஒரு வரியை தேர்ந்தெடுக்கவே ! அப்படி வரியை நான் கண்டுபிடிக்கும்போது .. The Sharpest Me என்னுள் விழித்துக்கொள்கிறது.
3. 10K Slow Jogging ;
ஓடுவது என் Cup of Tea அல்ல. மெதுவாக ஓடுவது எனக்கான களம். அதில் கிடைக்கும் endorphins ஏற்படுத்தும் அக புற மாற்றங்களில் .. The Sharpest Me யை நீங்கள் காணகூடும்.
10K Steps Club ஆரம்பித்த Priyanalli Raghavan க்கு நன்றிகள். இந்த குழுவில் consistent ஆக 10000 steps செய்பவர்கள் .. பெரும் Inspirations !
💐💐💐
உங்களின் ” The Sharpest You ” தருணங்கள் எது ?
💐💐💐





