நான் எனப்படும் நான் : 059
#WhoisJay ; 34
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன். இதே தேதியில். காலை 07.00 மணி அளவில்.
💐💐💐
சில நொடிகளில் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிவிடுகிறது ? Mumbai யில் இருந்து சென்னை நோக்கிய Drive அது. காலையிலேயே ஆரம்பித்த Drive – முதல் நாள் இரவே மனதிற்குள் ” நாளை இப்படி ஒரு Drive ” வேண்டுமா என்று கேட்டதை நான் சரியாக வாங்கி கொள்ளவில்லை என்பதே முழு உண்மை ! )
நன்றாகவே போய்க்கொண்டு இருந்த பயணம் அந்த பாலத்தை அடைந்த போது … பாலத்தின் சமநிலை சரியில்லாததால் எனக்கு அருகே பயணித்த லாரி ஒன்று தன் Balance ஐ இழக்க, எனக்கு ஒரே choice பாலத்தின் இடதுபக்க சுவர் மற்றும் லாரிக்கு இடையே நசுங்கி கடைசி மூச்சை சுவாசிக்க வேண்டிய நிலை. ( இங்கே என் வாழ்க்கை முடிகிறதோ என்று ஒரு micro வினாடி தோன்றியது உண்மை ! ). ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாய் லாரி தன் balance ஐ கண்டிபிடித்து வலது பக்கம் நகர, அதனிடம் இருந்து நான் தப்பினாலும், பாலத்தின் இடது சுவரில் ஒரு மோதல், பின் பாலத்தின் நடுப்புற பிரிவில் இன்னொரு மோதல், மீண்டும் பாலத்தின் இடதுபுற மோதல் .. என்று Verna Fluidic நிற்பதற்குள் … என் நடு நெஞ்சுப்பகுதி மூன்று முறை Steering இல் அடித்து, ( Air Bag open ஆவதற்குள் ), கிட்டத்தட்ட சுய நினைவை இழந்து ..
Car கதவு Lock ஆகியிருக்கிறது. திறக்க வாய்ப்பே இல்லை. வலது பக்கம் நகர முடியாது. இடது பக்க கதவை திறப்பது தான் ஒரே வழி. இடது பக்கம் நகர வேண்டுமானால் என் உடலை நான் இழுக்க வேண்டும். நெஞ்சுக்குழியில் உயிர் போகும் வலி. இருந்தாலும் உடலை இழுத்து வெளியே தள்ளினேன். என்னை பொறுத்தவரை நான் பேசிய தன்னம்பிக்கை வகுப்புகள் எல்லாம் ஒருசேர சேர்ந்து என்னை வெளியே இழுத்து எறிந்த தருணம் அது. Car க்கு வெளியே தரையில் இரு கைகளையும் ஊன்றி, மனதுக்குள் பிடித்த நட்பிடம் பேசிவிட்டு, மீண்டும் மெதுவாக வெளியே வந்து, எழுந்து நின்று, நினைவும் மயக்கமுமாக பார்த்தபோது .. “தமிழா ?” என்று கேட்டவர் தான் என் உயிரை காப்பாற்றியவர் !
அங்கே இருந்து அவர் தான் என்னை பார்த்துக்கொண்டார். அவரின் பணத்தில் தான் எனக்கு நினைவு வரும்வரை என்னை கவனித்துக்கொண்டார். Anuthama Radhakrishnan Kirthika Tharan இருவரும் இங்கே இருந்து அவரிடம் தொடர்பில் இருக்க .. நான் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிய தருணம் அது. Hospital, மொழி தெரியாத மனிதர்கள், கொஞ்சம் நினைவு, நிறைய மயக்கம், யாரோ வந்து என்னவோ கேட்ட நினைவுகள், ஏதோ ஒரு Police வந்து என்னவோ Documents கேட்ட நினைவுகள், தொலைபேசியில் என்னவோ சொன்ன கேட்ட நினைவுகள் … மருந்துகளின் அருகாமை, Tablets உள்ளே செல்வதும் மயங்குவதுமாக … இந்த கணம் என் வாழ்வின் மிக முக்கியமான ஒன்று. இங்கே நான் மட்டுமாக இருந்து அனைத்தையும் எதிர்கொண்டதில் .. ” போடா … அதையே பார்த்துட்டோம் ” ன்ற நம்பிக்கை இன்னமும் மனதில் ! அனு, கீர்த்தி இருவருக்கும் நன்றிகள். அந்த மனிதர் இன்னும் என் தொடர்பில் இருக்கிறார். வாழ்க்கை அனுப்பும் மனிதர்கள் காலங்களின் பக்கங்கள்.
இரண்டு நாட்களில் அங்கே இருந்து பயணம். வழக்கம் போல Doctor வேண்டாம் என்று சொல்ல … வழக்கம்போல நான் பயணத்தை தொடங்கினேன். அந்த பயணத்தில் என்னை கைத்தாங்கலாக இழுத்து சென்று அமர வைத்து கீழே இறங்கும் வரை என்னை கவனித்த அந்த யாரோ விமான பணிப்பெண்ணுக்கு எம் நன்றிகள்.
கோவை விமான நிலையத்தில் Shankara Narayanan காத்திருந்து என்னை தத்து எடுத்துக்கொண்டது இன்னும் நினைவில். Ganga Hospital இல் அனைத்து Check up களும் முடிந்து, Ok ஆகிவிடுவீர் என்று காதில் விழுந்த தருணங்களில் நான் மீண்டும் எழுந்தேன். இரண்டு நாட்களில் அடுத்த Training. வேண்டாம் என்று எல்லோரும் சொன்னாலும் வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்தேன். திண்டுக்கல். ஷங்கர் தான் drive செய்தார். Training ஆரம்பிக்கும்போது தலை சுற்றியது. Vomitting sense. ஆனாலும் தொடர்ந்தேன். என்னை பொறுத்தவரை அது மறக்க முடியா Training – எனக்கு !
இந்த இடைப்பட்ட நாட்களில் அதிகாலை 02 அல்லது 03 மணி வேளைகளில் … சட்டென எழுவேன். Car மோதிய நினைவுகள். நெஞ்சில் வலி. இது மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. என்ன செய்வது என்று திகைத்து இருக்கிறேன். சமயங்களில் தலையணையை அழுத்தி பிடித்து வலி தணிக்க முயற்சித்து இருக்கிறேன். ஆனாலும் வலி உயிரை எடுக்கும். காலம் தான் அதற்கு மருந்து. அப்படித்தான் அது ஆறி இருக்கிறது.
எனக்கு Accident என்றவுடன் என்னை நன்கு கவனித்த மனிதர்கள் போல … அந்த நேரம் வரை எனக்கு நெருக்கமாக காட்டிக்கொண்ட மனிதர்கள் எப்படி மாறி இருந்தார்கள் என்று புரிய முடிந்தது.
அந்த நேரத்தில் என்னிடம் வியாபார தொனியில் பேசிய நிறுவனத்தின் tie ups ஐ அப்போதே cut செய்திருந்தேன். ” நீங்களே எம் குரு ” என்று நன்றாக இருக்கும்போது பேசியவர்கள் எல்லாம் … காணாமல் போயிருந்த தருணம் அது ! அப்போது ” Accident ஆயிடுச்சாம் ” என்று சிரித்த மனிதர்களும் உண்டு. வாழ்க்கை அப்படித்தான். ஆனால் என்ன ? இரண்டு வருடங்கள் கழித்து அவர்களை பற்றி நான் இங்கே எழுதவும், அவர்கள் தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டது இங்கேயே நடப்பதையும் … செய்வதும் அதே வாழ்க்கை தான் !
உண்மையை சொன்னால் எனக்கு இன்று தான் பிறந்த நாள். நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்ல விரும்பினால் .. எப்போது விபத்து நடந்தாலும், அருகே சென்று அந்த மனிதர்களை கவனியுங்கள். அதுதான் மனித நேயத்தின் முதல் உதவி !
💐💐💐