நான் எனப்படும் நான் : 060
#WhoisJay ; 035
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன்.
💐💐💐
இப்படி Car தன்னை உரு மாற்றி இருந்தாலும் எனக்கு ஒரு கீறல் கூட இல்லை என்பதை நம்ப முடிகிறதா ? இரத்தம் என்று ஒன்று இந்த விபத்தில் வரவே இல்லை என்பது தான் இன்னுமுமே ஆச்சர்யம். நெஞ்சில் Steering இடித்த வலியும், Shock ம் தவிர்த்து …வேறு எதுவும் எனக்கு நடந்துவிடவில்லை.
விபத்து முடிந்து யாரோ ஒருவர் என்னை Two Wheeler இல் ஏற்றி வேகமாக அழைத்துக்கொண்டு சென்றார். எனக்கு பின்னே நடராஜன் அமர்ந்து என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டார். நான் semi மயக்க நிலையில் இருந்தேன். கொஞ்ச நேரத்தில் நான் மயங்கினேன். பின் மீண்டும் ஞாபகம். ஏதோ ஒரு கோவிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தேன். என்னை சுற்றி பரபர குரல்கள். யாரோ என் முகத்தில் நீர் தெளித்தார்கள். கண் விழித்தால் மீண்டும் நினைவு தப்பியது. எதிரே ஒரு மராட்டிய சிவாஜி படம் இன்னும் ஞாபகத்தில் ! யாரோ ஒரு மருத்துவர் வந்தார். வேகமாய் Check செய்தார். ” அவசரம். Hospital செல்ல வேண்டும் ” என்று கத்தினார். ( அவர் ஏன் அப்படி கத்தினார் ? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? அங்கே இருக்கிறது மனிதம். எந்த CAA அங்கே வந்தது ? யார் என்ன மதம் என்று யார் கேட்டார்கள் ? ). ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. நான் ஆம்புலன்ஸில் கிடத்தி வைக்கப்பட்டேன்.
ஆம்புலன்ஸில் பயணித்த போது .. என் விரல்களை பற்றிக்கொண்டு நடராஜன் சொன்னது இன்னமும் நினைவில். ” உங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. “. இருவரும் சிரித்தோம். நான் சிரிக்க முயற்சித்தேன் என்பதே உண்மை. ” உங்கள் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே ? “. அவர் சிரித்தார். ” உங்கள் முகத்தை கவனித்தேன். வரவேண்டும் என்று தோன்றியது. வந்துவிட்டேன். ” என்று சிரித்து ஒரு கதை சொன்னார். எனக்கு கண்ணீர் வழிய சிரிப்பாக வந்தது. பலமுறை பயிற்சி வகுப்புகளில் நான் சொன்ன கதை அது ! பலரின் வாழ்க்கைக்கு உத்வேகம் கொடுத்த அதே கதை எனக்கு இப்போது ! என்ன கொடுக்கிறோமோ ….அதையே பெறுகிறோம் !
அம்மா அப்பா தங்கைகள் தங்கை குழந்தைகள் ஞாபகம் வந்தது. என்னவோ தெரியவில்லை கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. மீண்டும் மயக்கம். உடல் தூக்கிபோட .. ஆம்புலன்ஸ் நின்றது. Driver ஓடிவந்து கைபிடித்து என்னவோ Check செய்தார். பின் சொன்னார் .. ” ஒன்றுமில்லை. ஆனால் நாம் சீக்கிரம் செல்ல வேண்டும் “. அப்போது ஒரு toll gate இல் வாகனங்கள் விலக வேகமாக சென்றது இன்னும் ஞாபகத்தில் !
( தொடரும். மருத்துவமனை நிகழ்வுகள் தான் எனக்கான பயிற்சி வகுப்புகள் ! அவற்றை பற்றி எழுதுவது யாருக்கோ எங்கேயோ உதவக்கூடும் ! )