படம் சொல்லும் பாடம் – 020
#MyMoviesList ; 006
Evaru ; Telugu.
💐💐💐
Marriage Because of Convenience – என்று ஆரம்பமாகும் வாழ்க்கையின் போக்கை அட்டகாச திருப்பங்களுடன் விவரிக்கும் கதை. இதற்காக இது என்கிற உறவுகளில் ” வேறு ஏதோ ” ஒன்றை நாம் இழந்துகொண்டே இருப்போம். அது நம்மை நாம் எதிர்பார்க்காத பக்கங்களை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த கதை சொல்லும் இன்னொரு பாடம் – Image என்கிற வளையத்தில் விழுந்துவிட்டால் அதை காப்பாற்ற மனிதன் எதையும் செய்வான் – அவள் பெண்ணாக இருந்தாலும் !
Regina Cassandra வா இது ! பொதுவாகவே நாம் கதாநாயகிகளை ” பொம்மைகளாக ” காட்ட முயற்சித்து தான் அவர்களின் உண்மை திறனை வெளிக்கொணர மறுக்கிறோம். ஒரு இயக்குனருக்கு பெரும் சவாலே அந்த நடிகனை நடிகையை அவருக்கான Image இல் இருந்து வேறு மாதிரி பார்க்க முடிவது தான். ஆரம்ப மணிரத்னம் படங்களில் இதை காண முடியும். இங்கே Regina கிடைத்த களத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பொதுவாக Regina வை கவனிக்கும்போது எனக்கு வழக்கமான கதாநாயகி தாண்டி இவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தோன்றும். அதை இந்த கதை களம் கொண்டு வந்திருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஒரே ஆள் – மூன்று வித கதை சொல்லலில் – நடிப்பது என்பதே சவால் தான். அதை அழகாக செய்திருக்கிறார்.
Hero என்று சொல்லமுடியாத ஆனால் படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் இன்னொரு கதாபாத்திரம் அட்டகாசம். கதையின் திருப்பங்களே இவரின் மூலம் தான். நல்லவனா ? வில்லனா ? உதவி செய்கிறானா ? பணம் தான் குறியா ? அறிவு தான் அவன் முதலீடா ? என்று படம் முழுக்க தன்னை நிலைப்படுத்தாமல் நகர்த்திக்கொண்டே வந்து கடைசியாக .. இதுதான் நான் என்று சொல்லும்போது நமக்கு தூக்கி வாரிப்போடும். சினிமாவின் பெரும் பலமே .. நம்மை காட்சிகளை வைத்து நம்ப வைத்து பின்னர் அந்த காட்ச்சிகளை வைத்தே அந்த நம்பிக்கையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எறிவது. படம் ஆரம்பித்து முடியும் வரை இந்த கதாபாத்திரம் தான் Twist களின் வேராக நிற்கிறது.
” என்னை கற்பழிக்க வந்த காவல் துறை அதிகாரியை நான் சுட்டு கொன்று விட்டேன் ” என்று ஆரம்பிக்கும் கதைக்கு பின் நடப்பவைகளை கவனித்தால் நாட்டில் நமக்கு சொல்லப்படும் செய்தியும் நடக்கும் செய்தியும் ஒன்றல்ல என்று புரிய ஆரம்பிக்கும் – குறிப்பாக உயர் தட்டு image மக்கள் அதில் involve ஆகும்போது !
மொத்த Team க்கும் வாழ்த்துக்கள். 2 மணி நேரம் எப்படி போனது என்று தெரியாமல் ஆனால் திரையை கவனித்துக்கொண்டே இருந்த நிமிடங்களை படமாக வழங்கியதற்கும், கதாநாயகியை ஒவ்வொரு விதமாக கதை சொல்ல வைத்ததற்கும் !
💐💐💐