படம் சொல்லும் பாடம் – 025
#MyMoviesList : 011
💐💐💐
நாகரீக யுவன் / யுவதி என்ற கல்லூரி வாழ்க்கை, அது சார்ந்த சரியான தவறான நட்புக்கள் / உறவுகள் / அதன் விளைவாக react செய்யும் பெற்றோர் / கல்லூரி நிர்வாக நடவடிக்கைகள் .. என்று ஒரு கல்லூரிக்குள் சென்று அந்த வாழ்வை நேரிடையாக பார்த்த அனுபவம்.
” நான் உன்னோட இருக்கேன்னு தான் சொன்னேன். விரும்பினேன். ஆனால் .. உன்னோட நான் இருக்கும்போது அவனுங்க அதை பார்க்கணும் னு நான் விரும்பலை ” இதை கடைசியாக ஒரு பெண் சொல்லும்போது அவளின் நியாயம் புரியவருகிறது.
” அவன் எனக்கானவன். அவனை எப்படி நீ அணுகலாம் ” என்ற போர்வையில் / பார்வையில் இன்னொரு பெண். இந்த இரு பெண்களுக்கு இடையில் சுழலும் கதை கடைசியில் இன்னொரு பெண்ணின் நியாயத்தை உணர்ந்தவுடன் … இரு பெண்களையும் ஒரே மேடையில் இணைக்கிறது. அதே நேரம் இந்த இருவருக்குமான அல்லது இருவர் சார்ந்த அவனின் இன்னொரு முகம் வெளிவர … யதார்த்தம் சுடுகிறது !
இன்றைய இளைய தலைமுறை எப்படி எல்லாம் திசை மாறுகிறது என்பதை இந்த படம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு செல்வது எதற்கு ? அது கூட இருக்கட்டும். அதை தவிர்த்து அந்த கல்லூரி காலகட்டத்தின் இளமை நினைவுகளை எப்படி எல்லாம் ஒரு தலைமுறை என்னென்னவோ பேரில் கெடுத்து கொண்டு நிற்கிறது என்றே தோன்றுகிறது.
படம் முழுக்க சில கேள்விகள் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கிறது. ஏன் என்று புரியவில்லை.
” இனி இளைய தலைமுறை இப்படித்தான் குழப்பி கொள்ளுமா ?
அதற்கு காதல் / Possessiveness / Lust / Rights என்றெல்லாம் பேரிட்டு … அதற்காக Fight பண்ணுவதே பெரிய வெற்றி போல யோசிக்குமோ ?
ஏன் கல்லூரி காலகட்டத்தில் மட்டும் இப்படியான பார்வைகளை இந்த தலைமுறை பெற்றுக்கொண்டே இருக்கிறது ?
சரி .. இதில் எல்லாம் தான் நினைப்பதை செய்வது தான் இந்த தலைமுறையின் நிறைவுப் பக்கங்களா ? ”
படம் பார்த்துவிட்டு இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில்களை பகிருங்களேன்.
வாழ்த்துக்கள் மொத்த Team க்கும்.
💐💐💐





