படம் சொல்லும் பாடம் – 026
#MyMoviesList ; 012
#TheArtist / மலையாளம்/ Amazon Prime.
💐💐💐
கதை இருக்கட்டும். நடிப்பு தான் பிரமாதப்படுத்துகிறது. கூடவே அந்த ஓவியங்கள் ! என்னவோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன !
பிடித்து போகிறது இருவருக்கு. ஆண் ஒரு திறமையான Painter. ஆனால் அது மட்டுமே தெரிந்த ஒருவன். பெண் அவனை அழகாய் நேசிக்கும் ஒருத்தி. அவனை சிறப்பாக கொண்டு வருவதை தவிர அவளுக்கு வேறு எதுவும் உலகம் இல்லை. இருவரும் இருவருக்கிடையில் எதிர்பார்ப்பது ” Spending a Quality time together “. ஆனால் அந்த Quality Time க்கு இருவருக்கும் இரு அர்த்தம் !
ஒரு விபத்து. கண்பார்வை போய்விடும் ஆண். ஆனாலும் Imaginative திறமையுடன். குடும்ப மொத்த சுமையும் பெண்ணின் மேல். கூடவே இருக்கும் போலி ஆண் நட்பு வேறு எதையோ பெண்ணிடம் எதிர்பார்க்க, நிதி பிரச்சினைகள் ஒரு பக்கம் இழுக்க …அனைத்தையும் சமாளிக்கிறாள். திருமணம் அற்ற அந்த உறவில் சில நொடிகளில் ” போடா டேய் ” என்று உதறி விட்டு செல்ல முடியும். ஆனாலும் .. பெண்ணுக்கு இவ்வளவையும் தாண்டி அவனை பிடிக்கும்.
இறுதி முடிவு வழக்கமான சினிமா என்றாலும், இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றி கொண்டே இருக்க வைப்பதில் தான் படம் வெற்றி பெறுகிறது.
பகத் ஒரு யதார்த்த நடிகன். திறமையை பார்த்து வியக்க நாம் நினைத்தாலும் அவரின் மேல் ஒரு எரிச்சல் வருகிறதே .. அங்கே இருக்கிறது அவரின் நடிப்பு. Ann Augustine – என்ன ஒரு யதார்த்த முகம் ! பக்கத்து வீட்டு பெண்ணை போன்ற சாயலில் .. உணர்வுகளை வெளிப்படுத்தும் அதனை Close Up Shot களிலும் தன்னை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். கிட்டத்தட்ட இப்போதைய அசின் போன்ற முகம். ஆனால் அசத்தல் நடிப்பு !
மொத்தம் 10 Characters தான். ஆனாலும் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை.
உறவுகளில் ஒருவர் இருவருக்காக உழைப்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அந்த உழைக்கும் ஒருவர் எதிர்பார்த்த மகிழ்வை தவிர மீதம் மட்டுமே அவருக்கு அவளுக்கு கிடைப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதுவே தான் வாழ்க்கையின் தத்துவம் போல !
மொத்த team க்கும் வாழ்த்துக்கள். உணர்வுகளை மனதுக்கு மிக அருகில் கடத்தியமைக்கு !
💐💐💐