நான் எனப்படும் நான் : 070
#WhoIsJay : 045
Bye Bye Block Sheep ! 😊😊
💐💐💐
மூடத்தனமா ? பொறுமையா ? என்றால் இரண்டும் இல்லை என்பது என் பார்வை. நட்பில் மூடத்தனம் வந்தால் அது நட்பே அல்ல. பொறுத்து போனால் ? அது ஒரு எதிர்ப்பார்ப்பு முகமூடி. நான் அதை அனுமதிப்பதில்லை.
பொதுவாகவே ” கருத்தை ” எதிர்கொள்ளல் என்பதில் தெளிவாக இருப்பவர்களின் நட்பு நகர்தல் மிக எளிதானது அழகானது. கருத்தை எதிர்க்கருத்தை கொண்டிருக்கும் இருவர் காலம் முழுக்க கூட நல்ல நட்பில் இருக்க முடியும். ஆனால் மூடத்தனம் ? போலி நம்பிக்கைகள் ? Hero worship மனநிலை ? Follower மனநிலை ? இங்கேயெல்லாம் நட்பு வட்டம் உயிரோடு இருக்க முடியுமா என்றால் …முடியாது என்பதே என் பதில் ! அது மட்டுமல்ல .. இந்த வட்டம் தான் வெறுப்புணர்வின் ஆரம்ப புள்ளி.
FB யின் அழகான முடிவுகளில் ஒன்று Block வசதியை கொடுப்பது. வாழ்க்கையிலும் அப்படித்தானே நாம் இயங்குகிறோம் ?
” அவன் வீட்டு வாசற்படிய நான் 10 வருஷமா மிதிக்கலை ” என்பது தானே யதார்த்த Blocking. அதை FB புரிந்து வைத்திருப்பது தான் பெரும் ஆச்சர்யம். தேவை அற்றதை Block செய்தால் தேவையானது முன்னேறும்.
நட்பு வட்டங்களில் ( FB யில் மட்டுமல்ல ), நான் முகஸ்துதி, புறம் பேசுதல், தன் மூடத்தனங்களை நியாயப்படுத்துதல், தான் நினைப்பதை சரி என்று சொல்ல வைக்க முயற்சித்தல், எதிராளி தவறு என்று புரியவைக்க செய்யும் Cornering strategy
…இதையெல்லாம் கொண்டிருந்தால் அந்த வட்டத்தை நான் தடமே இல்லாமல் அழிக்கிறேன். முன்னொரு காலங்களில் குட்டி சுவர் மேல் அமர்ந்து வீண் வம்பு பேசும் அதே வட்டம் தான் அது. அந்த வட்டத்திற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
நல்ல விடயங்களை, யதார்த்தங்களை, எதிர்கால நம்பிக்கைகளை, மனிதங்களை, உதவிகளை பேசா நட்புக்கள் எனக்கு தேவையில்லை. இது தெரியாமல் இந்தப் பக்கம் வந்திருந்தால் தாங்களே தங்களை Block செய்து வெளியேறுவது நலம். இல்லையெனில் …
என்ன …. ஒரு Extra Work எனக்கு !! ஆம்.
Bye Bye Block Sheep தான் !
💐💐💐