Slogging Songs : 25
#SloggingSongs ; 25
இன்று Slow Jogging இல் உடன் பயணித்த பாடல் மிக அருகாமையான ஒன்று.
💐💐💐
” எச கேட்டா நீதானோ
நெறமெல்லாம் நீதானோ ”
‘எச’ ஒரு அழகான சொல். ஒன்று சொல்லப்பட்டால் அதற்கு இணையாக, அழகாக, அதே பொருளுக்கு அல்லது அந்த பொருளின் எதிர்பொருளாக .. கருத்து பகிரப்படும் அழகு தான் ‘ எச ‘. அந்த ‘ எச ‘ யாக தலைவி மாறுவதை விட என்ன வேண்டும் ?
நிறம் எல்லாமே தலைவி எனில் …தலைவன் ஒரு வண்ணக்கலவை என்றே தோன்றுகிறது. தலைவனுக்கென வண்ணமில்லா பொழுதுகளில் தலைவியே வண்ணமாவது பெரும் அழகு.
” தெனம் நீ தூங்கும் வரத்தான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே ”
தலைவி தூங்குவதை பார்த்தபின் தூங்கும் தலைவன் அரிது. அப்படி கவனிக்கும் தலைவனுக்கு அதற்கு பின் தான் அவன் வாழ்க்கை ஆரம்பமாகிறது. அதுவரை தலைவியின் வாழ்க்கை தான். மீண்டும் காலையில் தலைவி பேசும் பேச்சில் தலைவன் தன் வாழ்க்கையை விடுத்து, மீண்டும் தலைவியின் வாழ்வில் ….கலக்க …!
” உன்ன சுமக்கிற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா ”
தலைவியை சுமந்தால் தலைவியின் நிழலும் மேலே வந்து விழுவது தான் பொழுதுகளின் அழகு. அந்த அழகின் போது கண்ணால் கொல்வது கொள்வது .. இரண்டும் பெரும் உறவின் முதல் விதை !
” ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்
கைய குடு கதவாக்கி சாதிக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் ”
ஒரே மழையில் நனைய, தலைவனுக்கும் தலைவிக்கும் இட
இடைவெளி மறைய, கை கதவாகும் பொழுதுகள் குளிர் முத்தங்களின் வரவை வரவேற்கும் பொழுதுகள். அங்கே தலைவன் தலைவி என்ற இரண்டும் மறைந்து .. அவன் அவள் …அதுவாக மாறும் மௌன பொழுதுகள் அவை !
” தெகட்ட தெகட்ட ரசிக்கணும் ”
ரசிப்பதில் திகட்டல்க்கு வாய்ப்பே இல்லை. திகட்ட திகட்ட ரசித்தல் என்று ஒன்று இல்லவே இல்லை. ரசிக்க ரசிக்க திகட்டல் விலகி .. இணைதல் தான் யதார்த்தம் என்பதை தலைவனும் தலைவியும் உணர .. வாழ்க்கையின் 0 Zero பொழுதுகள் ஆரம்பம்.!
என்ன பாடல் என்று புரிகிறதா ?
💐💐💐