நான் எனப்படும் நான் : 080
#WhoIsJay : 055
#TravelInfinite #LiveEveryVisual
💐💐💐
75 நாட்களாய் தன்னை அகத்திலேயே சுவாதித்துக்கொண்டிருந்த உணர்வு ஒன்று தன் இறக்கையை விரித்து கொண்டு முடிவிலியை நோக்கி தன்னை நிறுத்திக்கொண்டிருந்த போது …
அருகில் ஒரு Witness ஆக நின்றிருந்த எனக்கு மனதுக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
” பயணங்களே என் சுவாசம். பயணங்களே என் கரு. பயணங்களே என் பிரசவம். பயணங்களே என் எதிர்கால இருப்பு. ” என்று அந்த குரல் எனக்கு மிக பரிச்சயமான ஒன்று. நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறது. எனக்கு பிடித்த பாடல் ஒன்று ” தென்றல் என்னை தீண்டினால்… ” என்று மெலிதாய் தன்னை இசைத்துக் கொண்டிருக்க… அந்த பரந்த வெளியில் வாகனத்தில் இருந்து வெளியே இறங்கி நின்ற போது .. நான் எத்துனை சிறு அல்லது Negligible ஆளுமை என்று உணர முடிந்தது !
சுற்றிலும் மலை, நீல வானம், பரந்திருக்கும் பரப்பில் ஒரு ஓரமாக பெரும் நீர்த்தேங்கல். அணைக்கட்டின் உள்ளே வாகனம் இறக்கை விரிப்பதென்பது கோடை காலத்திற்கு மட்டுமே உள்ள சௌகரியம். நிதானமாய் சுற்றி ஒரு நடை நடந்தால், பட்டு தெறிக்கும் வெயிலிலும்… சில்லென அடிக்கும் காற்று எதையோ வருடி செல்ல … மார்பை தொட்டு பார்க்கிறேன். வருடல் அவ்வளவு இதம் ! விரலில் அதை உணரும் சுகம் போல் வேறெதுவும் இவ்வுலகில் இல்லை.
தன்னை சுற்றி யாருமில்லை எனும் போது வரும் உற்சாக பெரும் மூச்சும், யதார்த்த சிறு சிரிப்பும் எந்த வகை வாழ்வில் அடக்கம் என்று தெரியவில்லை. கண்ணுக்கெட்டும் அளவிற்கு யாரும் அற்ற அந்த பரப்பில் நான் நிலம் நீர் மலை காற்று என்று புலன்கள் இருந்தன. மகிழ்ச்சி நெருப்பாய் ஐந்தாம் புலன் சாட்சியாக உள்ளே நின்றுகொண்டிருந்தது.
நீண்ட நாளைக்கு பின் பயணம் ஆரம்பம். சிறு பயணம் தான் ! ஆனாலும் .. பெரும் சுதந்திரம். ” ஆடிக்கு பின்னே காவேரி தாங்காது ” என்று பாடல் கேட்டது எவ்வளவு பொருத்தம் !?
மீண்டும் உலகம் பார்ப்பது நடக்கும் என்ற நம்பிக்கையில் .. வாகனம் திரும்பியபோது … செம்மண் புழுதியாகி நின்றிருந்த வாகனத்தை பார்த்து சிரித்தேன்.
பின்னே ? இப்போது தானே அது அழகாக இருக்கிறது !
பயணிப்போம். அனைத்து காலங்களிலும்.
💐💐💐