நான் எனப்படும் நான் : 084
தற்கொலை யின் இன்னொரு பக்கம்.
💐💐💐
அந்த பெண்ணுக்கு teen வயது. படபடப்புடன் Call. Call இல் இருந்த Voice இல் தெரிந்த அவசரத்தில் இருந்து ” ஏதோ ஒன்று தவறு ” என்று புரிந்துகொள்ள முடிந்தது. நிதானமாக அணுகவேண்டிய விடயம் என்று ஆழ்மனம் சொல்லியது.
” தப்பு பண்ணிட்டேன் சார் ”
அமைதியாக கேட்க ஆரம்பித்தேன். இந்த மாதிரியான வார்த்தைகள் / வரிகள் நல்லது. தவறு முன்னமே உணரப்பட்டு இருக்கிறது. Action தான் அநேகமாக பிரச்சினையாக இருக்கக்கூடும்.
” ஒருவனை நம்பி செய்யக்கூடாத ஒன்றை செய்துவிட்டேன். நீங்கள் பயிற்சி வகுப்பில் சொன்னீர்கள் – அழகாக இருக்கிறாய் – என்றுதான் ஆரம்பிக்கும் – என்று சொன்னதை அழகை விரும்பும் ஆசை மறந்துவிட்டது. தப்பு செய்து விட்டேன். ”
அமைதியாக சொன்னேன்.
” என்னவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். சொல்லும்மா ? ”
” சொன்னதுக்கப்புறமும் என்னிடம் இப்போது பேசுவது போல பேசுவீர்களா சார் ? ”
Trust மிக முக்கியமான ஒன்று. அது வேண்டும் என்பதும் அது இருப்பதும் தான் கடின சூழல்களில் ஒருவரிடம் ” இவர்களிடம் பேசலாம் ” என்று தேர்ந்தெடுக்கும்.
” நீ என்ன சொன்னாலும் சரி. நான் இப்போது எப்படி உன்னுடன் இருக்கிறேனோ அப்படியே இருப்பேன் மா ”
ஒரு வித அமைதி அந்த பெண்ணிடம்.
பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.
” அழகாய் இருக்கிறாய் என்றதும் whatsapp இல் வளர்ந்த உறவு, மெதுவாக என் அந்தரங்கங்களை அவனிடம் காண்பிக்கும் அளவிற்கு போய்விட்டது. அவன் இப்போது அவனின் நண்பர்களுக்கு காண்பித்து …என்னை கேவலமாக நடத்துகிறான். நான் என்னை அவனிடம் அப்படி வெளிப்படுத்தியது மன்னிக்க முடியா குற்றம். என் அப்பாவுக்கு தெரிந்தால் இறந்தே போய்விடுவார் ”
வெடித்து சிதறிய பெண்ணை கொஞ்ச நேரம் அழுது ஓய அனுமதித்து அமைதியாக இருந்தேன். நிறைய விடயங்களில் அழுதல் சிறந்த Stress Buster.
” இருக்கட்டும். இப்போதும் நீ என் பெண் தான். நான் எப்போதும் உனக்கு அப்பா தான் ”
என்று நான் சொன்னபோது மீண்டும் வெடித்து அழுதாள் அந்தப் பெண். இந்த முறை மிக சத்தமாக. Trust ன் நன்றிக்கான வெளிப்பாடு அது.
அந்த பெண் சம்பந்தப்பட்ட கல்லூரி எனக்கு அறிமுகமான கல்லூரி என்பதால் நிர்வாகத்திற்கு சொல்லி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அவனிடம் இருந்த Mobile இல் இருந்த சம்பந்தப்பட்ட படங்களை அகற்றி, அதிரடியாக அனைத்து மாணவர்களின் Cellphone / Laptop பக்கங்களை சோதனை செய்து .. அந்த மாணவனுக்கு ” சொல்ல வேண்டியதை ” சொல்லி .. இந்த மனப் போராட்டத்தில் இருந்து அந்த பெண்ணை விடுவித்தல் நடந்தது.
” அன்னைக்கு Suicide பண்ணிக்கலாம் னு இருந்தேன். Tablet எல்லாம் வாங்கி வச்சுட்டேன் சார். என்னமோ தெரியவில்லை – உங்களிடம் பேசினால் என்ன ? என்று தோன்றியது. அதனால் பேசினேன் . சாகிற வரை மறக்கவே மாட்டேன் சார் ”
என்று சொல்லிவிட்டு சொன்னாள்.
” ஒரே ஒரு தடவை அப்பா ன்னு கூப்பிடவா ? ”
நான் சிரித்தேன்.
” ஏன் ஒரு தடவை ? அதே சாகிற வரை கூப்பிடும்மா … நான் சாகிற வரை ” என்று சொன்னபோது இருவரும் சிரித்தோம்.
தற்கொலை மனங்கள் எதிர்பார்ப்பது அவர்களை ” அவர்களின் சூழலில் ” இருந்து புரிந்துகொள்வதை ! வெறுமனே பேச, அறிவுரை சொல்ல, தவறை சுட்டிக்காட்ட, போதிக்க … அல்ல.
#பெற்றால்தான்பிள்ளையா என்றே நான் இன்னொரு மனதை அணுகுகிறேன்.
சில மாதங்களுக்கு முன் இங்கே முக நூலில் ஒரு ஆளுமை – இறை நடத்தும் இறப்பை தடுக்க நினைப்பது எப்பேர்ப்பட்ட பேதமை – என்று எழுதியதை பார்த்ததும் சிரிப்பு வந்தது. அதே இறை தானே நம்பிக்கைக்குரிய மனிதர்களின் முகத்தையும் அந்த பெண்ணுக்கு கடினமான நேரத்தில் மனக் கண்ணில் கொண்டு வந்திருக்க வேண்டும் ?
ஒரு தற்கொலையை கேட்டதும் ஒரு Counsellor ஆக ” அட .. எப்படியாவது தடுத்திருக்கலாமே ” என்று நினைப்பது மனிதாபிமானம். அதனால் ஒவ்வொருவராக நாம் போய் கேட்க முடியாது.
அதற்கு பதில் ….
நம்பிக்கைக்குரிய மனிதனாக முதலில் வாழ்ந்து நிற்க வேண்டும். ஒரு நம்பிக்கைக்குரிய மனிதன் மனிதி மனதிற்குள் தோன்றினால் .. அவர்களிடம் பேசினால், அவர்களும் சரியாக பேசி இருந்தால் … இவ்வளவு ” இருந்திருந்தாலும் ” களும் சரியாக நடந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்பது மனிதாபிமானம். யதார்த்தம்.
அந்த பெண் பேசிய போது நான் பயிற்சி வகுப்பில் இருந்திருந்தால் என் Phone ஐ எடுத்திருக்க போவதில்லை. அவளும் வேறு முடிவுக்கு சென்றிருக்க கூடும். இருவரும் ஒரே புள்ளியில் சந்தித்ததும் இயற்கையின் பார்வை தான்.
ஒரே ஒரு கேள்வி தான்.
நமக்கு Phone call வந்தால் பேசும் அளவிற்கு நம்பிக்கையாக இருக்கும் அளவிற்கு நாம் வாழ்கிறோமா ? இருக்கிறோமா ? என்று நம்மை கேட்டுக்கொள்வதே … இன்னொரு தற்கொலையின் எண்ணத்தை நாம் எதிர்கொள்ள முயற்சிக்கும் சரியான வழிகளில் ஒன்று.
பயணிப்போம் – குறிப்பாக கடின காலகட்டங்களில் ஒன்றாக.
💐💐💐