நான் எனப்படும் நான் : 086
Who Is Jay : 061
💐💐💐
💐 எப்படி உங்களால் Consistent ஆக செய்ய முடிகிறது ?
ஆரம்ப வாழ்வில் நான் Consistent ஆக இல்லை. அப்பாவை பார்த்து அதிசயித்து நின்றது உண்டு. எப்படி இவரால் ” கர்மமே கண் ” என்று இருக்க முடிகிறது ? என்று ஒரு கேள்வி அவரை பார்க்கும்போதெல்லாம் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒருமுறை இமயமலையில் ஒரு Monk சொன்னார்.
” Consistency is a Myth. When you Take everyday as a New Day, From where Track Record comes ? Track Record is the root for Consistency birth. Just LIVE EVERYDAY and Disappear. Consistency is the name People choose to give for your Everyday Living. Let them name whatever they want to ! ”
இந்த பார்வை என்னை பாதித்தது. தினமும் செய்ய வேண்டியதை செய்துவிட்டு தூங்குவதை போல அழகான வாழ்க்கை இருக்க முடியுமா ? அதனால் தினமும் செய்ய வேண்டியதை செய்து விட்டு தூங்குகிறேன். அந்த ” செய்ய வேண்டியதில் ” இருக்கிறது என் உங்கள் நம் வாழ்க்கை.
💐 தொடர்ச்சியாக செய்யும்போது ஒரு தளர்வு வருவதில்லையா ?
எனக்கு உங்களுக்கு நமக்கு பிடித்த ஒன்றை செய்யும்போது வராது. அதாவது அவரவர்களுக்கு விருப்பமான ஒன்றை செய்தால் ! மூச்சு விட நமக்கு சோர்வு வருகிறதா ? 365 x 3 முறை சாப்பிடுகிறோமே .. சோர்வு வருகிறதா ? 18000 plus முறை தூங்குகிறோமே .. சோர்வு வருகிறதா ?
செய்ய வேண்டியதை Auto Mode க்கு கொண்டு செல்வதில் இருக்கிறது வாழ்க்கையின் அழகிய பக்கங்களின் வாசனை !
💐 சிரித்து கொண்டே இருக்கிறீர்களே ? எப்படி முடிகிறது ?
அட ! எனக்கும் கோபம் வரும். என்ன … வேகமாக அதில் இருந்து வெளியேறி ” ஆக வேண்டியதை ” என்னால் பார்க்க முடியும். அந்த ” வேக வெளியேறல் ” தான் என் பலம். என் சிரிப்பின் அச்சாணி. மகிழ்வின் வேர்.
💐💐💐
பயணிப்போம் – குறிப்பாக கடின காலங்களில் ஒன்றாக !
😊😊😊