Slogging Songs : 27
Jan to June – 6 Months – 28 Lakhs Steps.
இந்த மாத 06 இலட்சம் செய்தாயிற்று. ஆனால் …Covid காரணமாக மொத்தமாக செய்ய வேண்டியதில் … 8 இலட்சம் பின்னோக்கி. இல்லை எனில் 36 இலட்சத்தை தொட்டிருக்க வேண்டும். வருடத்திற்கு 72 இலட்சம் என்று வைத்திருந்தேன். இப்போது 64 இல் இருக்கும் இலக்கை – மாதம் 1.5 Lakhs அதிகம் செய்து 72 ஐ தொட வேண்டும். செய்வேன். செய்வோம்.
💐💐💐
இன்று உடன் பயணித்த பாடல் ..
” மங்கை மான் விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன ? ”
அது என்ன மங்கை மான் விழி ? நானாக இருந்தால் இந்த மானே தேனே எல்லாம் ஒப்புக்கொள்ள போவதில்லை. ஆண் பெண் சரி சமம் என்பதை முதலில் பாடலில் கொண்டு வர வேண்டும்.
” மங்கை ஆண் விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன ? ”
என்றே நான் எழுத்தக்கூடும். ஒரு பெண்ணுக்கு ஆண் விழி அம்புகள் இருக்க வாய்ப்பில்லையா என்ன ? அல்லது
” மங்கை மற விழி அம்புகள் … ”
மார் துளைக்கும் விழிகள் என்றால் அதில் இருக்கும் வேகமும், வீரமும், கூர்மையும் முதலில். சரியான பார்வையை பெண் வழங்கினால், எதிரே நிற்கும் மார் துளைந்தே போகும். அந்த துளைத்தளில் வலி இருக்க வாய்ப்பே இல்லை. அமிழ்து ஊறும் காயங்களில் வலி இருப்பதில்லை.
” இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை.
இடையினில் மேகலை இருக்கவில்லை ”
மேகலை ( அரைஞாண் ) இருக்க முடியாத அளவிற்கு இளைத்தல் – மன்னவனை காணாத போது ! மன்னவன் இல்லா காலங்களில் Diet டெல்லாம் தேவை இல்லை. தானாகவே இளைக்கும் – உண்மையாக இல்லை என்று வருந்தினால் ! 😊😊
” யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
உறவு சேர்ந்ததென்ன ? ”
சேர்வதில் கிடைக்கும் உறவு அது எவ்வழி வந்தது என்றெல்லாம் கேள்வி கேட்பது இல்லை. உறவின் அழகே ” இக்கணத்தின் நொடிகளில் ” வாழ்ந்து சிரித்து இணைந்து தளர்ந்து மறந்து நினைந்து .. வாழ்வது மட்டுமே.
” ஒரே ஓரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன ? ”
தீண்டல் இல்லா உறவும் உண்டு. அங்கேயும் பூக்கள் பூப்பது உண்டு. அப்படி எல்லாம் இல்லை என்கிறீர்களா ? பார்வையில், அல்லது, வெறும் பார்வையிலேயே சிலிர்த்தவர்களை கேளுங்கள். சொல்லாமல் சொல்வார்கள். அல்லது சிரித்து நகர்வார்கள்.
பாடல் தெரிகிறதா ?
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் காட்சியும். ( கமல் – சிம்ரன்க்கு இந்த பாடல் கிடைத்திருக்கலாமோ )
💐💐💐





