நகரும் புல்வெளி : 046
#JustGetOut ; 03
💐💐💐
பெரும் பலம் நிறைந்த ஒன்று தான் அது. உலகின் இயக்கத்தின் மூலம். எதையும் சுட்டெரிக்கும். எங்கும் செல்லும். எந்த இடத்திலும் உள் நுழையும். தான் செல்ல முடியவில்லை எனில் தன் வெப்பத்தை அனுப்பும. இவ்வளவும் இருந்தும் ஒரு இலை மறைக்கும்போது பூமியை அடைய முடியாமல் தடுமாறும். அதுதான் இயற்கை. வல்லவனுக்கு வல்லவன் தான் வரவேண்டும் என்று யார் சொன்னது ? வல்லவனுக்கு எறும்பும் வல்லவன் தான் – அதன் குகையில் !
பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கும் ஒருவனுக்கு சட்டென ஒரு நொடி ஒரு சூழ்நிலை ஒரு மனிதன் ஒரு குழு எல்லாவற்றையும் மாற்றி விட்டு அமைதியாக நிற்கும். ஒரு நொடி ஒரு இலைக்கு சமம். ஒரு சூழல் ஒரு மரத்திற்கு சமம். So … யார் இங்கே பெரியவர் ? சிறியவர் ? யார் என்பதை அவரவர் குகை, நேரம், இருப்பு, சூழல் .. முடிவு செய்வதால் … யாரும் சிறியோர் அல்ல.
ஒரு விபத்தில் என்னை காப்பாற்றிய யாரோ ஒருவர் என் மொத்த வாழ்க்கையை விட பெரியவர் ஆகிறார். சட்டென நான் சிறுத்து போகிறேன். என் உயரத்தால் அல்ல. அவரின் பெரும் ஆளுமையால். அப்படி ஆளுமைகளை நீங்கள் கடக்கும்போது … கொஞ்சம் அடிபணியுங்கள். அவர்களின் ஆளுமையை உணருங்கள். சூரியன் இலைக்கு முன் அமைதியாகவே இருக்கிறது. உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ? என்று என்னை சூரியன் கேட்பதாகவே உணர்கிறேன்.
என்ன ? சூரியன் என்னை கேட்டது உங்களுக்கும் கேட்கிறதா ?
💐💐💐





