நான் எனப்படும் நான் : 099
#WhoIsJay : 075
💐💐💐
“ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றில் இருவர் குதித்தனர். இருவரும் எதையோ தேடித்தான் குதித்தார்கள். ஆனால் ஒருவன் தேடலை தவிர்த்து ஆற்றின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். ஆறு அவனை ஏதோ ஒரு பக்கமாய் இழுத்து சென்று கொண்டு இருந்தது. நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு இறந்தான்.
இன்னொருவன் தேடலை மட்டுமே கவனமாய் வைத்து முன்னெறினான். அவேன் எதை தேடினானோ அது கிடைத்தது. ஆனால் அவனும் ஆற்றின் போக்கை கவனிக்த் தவறியதில் ஆற்றின் போக்கில் இழுத்து செல்லப்பட்டு இறந்தான். இருவரும் மேல் உலகில் சந்தித்த போது .. ஒருவன் இன்னொருவனை கேட்ட கேள்வி .. ” ஆமாம் நீ எப்படி ? “.
அங்கே இருந்த சாமியார் சொன்னார்.
” நீங்கள்இருவரும் தவறு செய்திருக்கிறீர்கள். பாவம் நிறைந்தவர்கள் ”
இப்போது இருவரும் சாமியாரை பார்த்து கேட்டனர் .. ” அதுசரி .. நீங்கள் எப்படி இங்கே ? ”
💐💐💐
வாழ்க்கையில் நான் சந்திக்கும் பலரின் நிலையும் இப்படித்தான்.
“இதனால் தான் நீங்கள் .. ” என்று அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது தாங்களும் அங்கே தான் இருக்கிறோம் என்பதை மறந்து
” I am Yogi. All Others are sinners ”
என்று பேசுவதை கவனித்து சிரிக்கிறேன்.
💐💐💐
ஒரு பயிற்சி வகுப்பில் என்னிடம் ஒரு Corp CEO கேட்டார்.
” உங்களால் முடியாத விஷயம் என்பது என்ன ? ”
” நிறைய ”
” நீங்கள் Trainer ஆச்சே. முடியாது என்கிறீர்களே. ”
” அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? எனக்கு ஆயிரம் முடியாத விஷயங்கள் இருக்கலாம். தேவையான இரண்டோ அல்லது மூன்றோ செய்வதில் நான் நினைத்ததை சாதித்திருக்கலாம். அதுவே எனக்கு போதும் என்று இருக்கலாம். அதை விட்டுவிட்டு… முடியாத விஷயங்களை எல்லாம் முடிப்பதேவா என் வேலையாக இருக்க வேண்டும் ? இல்லை … முடியாத விஷயங்களை முடித்தவன் இவன் என்று எனக்கு ஏதும் சிலை வைப்பார்களா ?. தேவைக்கு தான் முடியாத விஷயங்களை கையில் எடுக்க வேண்டுமே தவிர .. முடியாததை எல்லாம் முடிக்க நினைக்கும்போது தான் .. Killing Ego வெளியே வருகிறது. அதுதான் மனிதத்தின் பெரும் கேடு ! ”
சொல்லிவிட்டு அவரை பார்த்தேன். அமைதியாக இருந்தார். அவர் காப்பாற்றி வந்த CEO image உடைந்து இருப்பதை கவனிக்க முடிந்தது. CEO என்றால் அனைத்தையும் முடிப்பவர் என்று யார் அவருக்கு சொன்னார்கள் என்று எனக்கு தெரியவில்லை. Trainer என்றால் அனைத்தையும் முடிப்பவர் என்று எனக்கும் சொன்னார்கள். நான் அதை கவனமாக வெளி தள்ளினேன்.
💐💐💐
மனைவி கணவனிடம் சொன்னாள்.
” எதிர்த்த வீட்டு ஆட்கள் புதியதாக இடம் வாங்கி வீடு கட்டி கொண்டு இருக்கிறார்கள் ”
கணவன் சொன்னாள்.
“சரி. ”
” இல்லை சொன்னேன். மற்றபடி ஒன்றும் இல்லை. ” இது மனைவி.
” சரி கேட்டு கொண்டேன். மற்றபடி ஒன்றும் இல்லை ” இது கணவன்.
புரிகிறதா ?
💐💐💐