The Covid 19 Pages – Day 03 / 04


#thecovid19pages ; Day 03 ; Part 04



” கற்றுக்கொடுப்பது மற்றவர்க்கு மட்டும் அல்ல. தனக்குள் இருக்கும் மாணவனுக்கும் சேர்த்துத்தான். “



Day 24 ; Fear ; The Real Strength என்று ஒரு Live செய்திருந்தேன். எத்தனை பேர் அதனை கவனித்தோம் என்று தெரியவில்லை ? ( இங்கே இணைப்பில்
Anuthama Radhakrishnan
அதை கொடுப்பார் ). அதன் முக்கிய points இங்கே Poster ஆக இணைக்கப்பட்டு இருக்கிறது.



Covid19 – Fear அல்ல. ஒரு பெரும் Strength. இறப்பு என்பதாலும், பொருளாதார வீழ்ச்சி என்பதாலும் அது பயத்தினை ஏற்படுத்துவது இயற்கையே. ஆனாலும் மனித மனம் இதையெல்லாம் விட மிகப் பெரியது.
” You are Bigger than Whatever You have Faced so Far ! “
என்பது என்னின் fav வாசகம் !
அன்று live இல் பேசியது எப்படி எனக்கு இந்த Covid19 இல் உதவுகிறது என்று பார்ப்போம்.



1. Name Your Fear In a Funny Way ;
Covid 19 = MMCR – Magic Mantra For Complete Rest !
இதை விட Best Rest கிடைக்க வாய்ப்பேயில்லை 
. 178 நாட்களை பார்த்து Corona வே என் தலையில் கொட்டி .. உட்கார சொல்கிறது 
.




2. Don’t do anything When You are in Fear. Be Calm ;
ஆம். அதை தான் அழகாக செய்ய முடிகிறது. குடும்ப உறவுகளுக்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வதை தவிர்த்து பெரும் மௌனம் தான் எம் பலம் இப்போது ! ( முடிந்த வரை பேசுவதை தவிர்க்கலாம் மக்களே. Energy யை save செய்து மீண்டும் வருகிறேன். Live இல் பேசுவோம் )
3. Think Long Term Solutions ;
இங்கே இருந்து சில பாடங்களை கற்றுக்கொள்வது நீண்ட கால பயணத்தில் உதவும். ஆம். அப்படி ஒரு பாடம் உண்டெனில் அது … உடலின் ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தல். இப்போது மட்டுமல்ல. எப்போதும். புதியதாக செய்யும்போது தான் பயம் நம்மை ஆட்கொள்ளும். தொடர்ந்து செய்தலில் பயம் முதலில் பழக்கமாகி பின்னர் பலமாக மாறும். இருட்டை பார்த்து முதலில் பயந்தவர்கள் தானே நாம் ?. இப்போது பழகி நடக்கவில்லை ?
4. Educate Yourself.
Covid19 என்றால் என்ன ? என்ன செய்ய வேண்டும் ? எப்படி எதிர்கொள்ள வேண்டும் ? போன்ற செய்திகளை கற்றல் .. தான் இப்போதைய தேவை.
5.Stage Fear – Prepare, Practice and Role play 10 Times .
Covid19 முடிந்த பிறகு என்ன செய்ய போகிறேன் – என்பதை கற்பனை செய்தால் சிரிப்பு வருகிறது. அநேகமாக
Anbu Arulmozhi
Meena Malaiyan
Bharathi Santhiya
Ruku Jey
Maragathavalli Palaniappan
… பள்ளிகளில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு பாடங்களை சொல்லிக்கொடுப்பதை இப்போது நினைத்தால் கிடைக்கும் energy க்கு இணை உண்டா ?
6. Surround Yourself with the People Who can Push You to do Things.
#5pmfamily தான் ஒற்றை வரி விடை இதற்கு. YOHO BROTHERS அசத்துகிறார்கள்.
7. Pre Visualize Your Success.
Covid19 வந்தால் என்ன செய்ய வேண்டும் ? என்ன மாதிரியான மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும் ? அறிவு சார் மருத்துவத்தையும், நம்பிக்கையையும் ஒரு சேர எப்படி கையாளுவது … போன்றவற்றினை பற்றி பேச இப்போதே தயாராகிறேன் ! அநேகமாக ஒரு வித்தியாசமான கலந்துரையாடல் – கூடிய விரைவில்.
Attention ;
Badhma Mani
/
Kohila Vallinayagam
/
Praba Karan
… ( Elite Group .. isn’t ? Hahahaha )
8. What’s the Worst thing can Happen?
இறப்பு. வேறென்ன ?. – ” சரி.. வந்த வேலை முடிந்தது. செய்ய வேண்டியதை செய்தாயிற்று. ஷப்ப்பா … ” என்று சிரித்து கடக்க வேண்டியது தான் – இறப்பையும் !
( இந்த மனநிலை வந்துவிட்டால் .. எதையும் சிரித்துக்கொண்டே எதிர்கொள்ள முடியும். அவ்வளவு தான் சூட்சுமம் ! )
9. Consult & Learn Strategy from Others.
Consult செய்தவரை என்ன செய்யக்கூடாது என்பது வருகிறது. என்ன செய்யலாம் ? என்று யாரும் பேசக்கானோம். ஆக .. அதுதான் தேவை ! முதலில் துணிவாய் எனக்கு Covid19 என்று சொல்ல வேண்டும். பின் நம் சார் சமூகம் நம்மை அழகாக அரவணைத்து கொள்ளும். ( எதிரிகள் நிறைந்தவன் தான் வெளியே சொல்ல வெட்கப்படுவான் – ஏதோ இது ஒரு பெரும் தோல்வி போல ! இது யதார்த்தம். யார் மூலமாகவோ யாருக்கோ செல்லும் தொடரில் நாமும் ஒரு புள்ளி .. அவ்வளவு தான் இது ! )
10. Try Something Different.
” தம்மாதுண்டு blade மேல வச்சிருக்கிற நம்பிக்கைய உன் மேல வைடா ” கில்லி யில் வரும் வசனம் இது.
கொஞ்சம் வித்தியாசமா சொல்வோமா ?
” தம்மாதுண்டு mg வைரஸ்ஐ பார்த்து பயப்படறத விட .. 78 kgs உடம்பு மேல நம்பிக்கையை வை. “
மறுபடியும் அந்த Fav line. …
” You are bigger than whatever you have faced so far ! “


