மீள்நினைவுகள் : 002
#மீள்நினைவுகள் ; 002
நமக்குள் சில கேள்விகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதேபோல சில பதில்களும். இவற்றை நாம் கேட்கிறோமா ?



ஒரு முறை பேருந்தில் பயணம் செய்ய எத்தனித்த போது உள்ளே ஏதோ ஒரு குரல் கேட்டது.
” வேண்டாம் “
சரி என்று நின்று விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பேருந்து வந்தது. மீண்டும் ” வேண்டாம் ” குரல். நின்றுவிட்டேன்.
இப்படியே பல பேருந்துகள். கடைசியாக .. ஒரு நட்பு வந்தது. Car இல். அங்கே அந்த நட்பை எதிர்பார்க்கவில்லை. அந்த நட்புடன் Car இல் பயணம். நீண்ட பேச்சு. மகிழ்ச்சி. சிரிப்பு. பாடல். ரசனை. கடந்த காலம். அனைத்தும். என் வாழ்வின் சிறந்த பயணங்களில் இதுவும் ஒன்று.
இறங்கும்போது கேட்டேன்.
” இந்த பயணத்தை எப்போது முடிவு செய்தீர்கள் ? “
பதில் எனக்குள் ஆச்சரியத்தையும் மகிழ்வையும் ஒருங்கே ஏற்படுத்தியது.
” காலைல தான். திடீர்னு தோணுச்சு. போலாம்னு. பார்த்தா வழியில் நீங்க. நினைக்கவேயில்லை. உங்க கூட பயணம். கரும்பு தின்ன கூலியா ? “
இருவரும் சிரித்தோம். நட்பு கிளம்பியது.
எனக்குள் ” வேண்டாம் ” என்று என்னை தடுத்த குரலின் நினைவு வந்தது.
” நான் சொல்வதை கேள் ” என்று இப்போதும் அது சொல்லியது.
” சரி “என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
இந்த கேள்விகளும் பதில்களும் நமக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நாம் கேட்கிறோமா ? என்பது மட்டுமே கேள்வி.
கேட்கிறோமா ? இனிமேல் கேட்போமா ?


