The Covid 19 Pages – Day 10 / 11
Day 10 / Part 11 ;



Covid19 ஐ சந்திப்பது எளிது. அது பெரும் பிரச்சினை இல்லை. காரணம் மிக எளிது. இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத ஒரு Attack கிற்கு – மனம் மட்டும் தான் பதிலாக இருக்க முடியும். ஆகவே … Covid19 ஐ சந்திப்பது பெரும் பிரச்சினை இல்லை !
ஆனால்.. அமைதியாக இருப்பது என்பது பெரும் சவால். அங்கே தான் தேவையான தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். அதை சந்தித்து வெளிவருவது தான் பெரும் தேவை.
புத்தகம் படித்தல், நல்ல தூக்கம், தியானம், எழுதுதல், திரைப்படம் பார்த்தல், புகைப்படங்களை சரிப்படுத்துதுதல், சமையல், பழைய சந்தோஷ நினைவுகள் … என்று எவ்வளவு வேலைகளை செய்தாலும் … மீண்டும் ஒரு 05 அல்லது 06 மணி நேரம் .. நம்மை பார்த்து என்ன செய்ய போகிறாய் என்று கேள்வி கேட்கும் ! அங்கே தான் உண்மையான சவால் வருகிறது.
Creativity தான் இதற்கு ஒரே பதில். ஆம். கொஞ்சம் கவிதைகளை எழுதி இருக்கிறேன். முதலில் அவை கவிதைகளா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும். நான் மனதில் தோன்றியவற்றை … வரிசைப்படுத்தி பதிந்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல வேண்டும்.
Posters உடன் வரப்போகும் இந்த கவிதைகளை .. படித்து உங்களின் பார்வைகளை பதியுங்கள். HappyCovid19 – என்றவுடன் இனி இந்த கவிதை தொகுப்புகளும் எனக்கு ஞாபகத்தில் வரும்.
பயணிப்போம் – கொஞ்சம் புதிய பார்வைகளை கொண்ட கவிதைகளுடன் !