The Covid 19 Pages – Day 12 / 13
#happycovid19 ; Day 12 / Part 13 ;
முதலில்
Kirthika Tharan
/
Anuthama Radhakrishnan
இருவருக்கும் பெரும் நன்றிகள். என்னை கவனித்துக்கொண்ட DSP / சசி நட்பு வட்டாரத்திற்கும் நன்றிகள். எனக்காக Call / Video / எழுத்து / Prayers என்று உடன் பயணித்த அனைத்து எண்ணங்களுக்கும் / எனக்கு ” Happiness Requires Nothing ” என்று பாடம் நடத்திய அனைத்து குழந்தைகளுக்கும் !
சரி …என்னவெல்லாம் பாடம் ?
1. உடல் சரியான Condition ல் இருந்தால் எழுந்து வருவது சட்டென நிகழும். இல்லை எனில் .. Virus இயல் அதன் வேலையை செய்யும்.
2. உடலில் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவம் பார்ப்பது நல்லது. வித்தியாசமான ஒன்றை உணர்ந்தவுடன் நான் 05 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன்.
3. Announcement மிக முக்கியமான ஒன்று. நான் வசிக்கும் பகுதிக்கு தான் முதலில் சொன்னேன். அதனால் நாம் Natural ஆகவே Quarantine ஆகி விடுவோம்.
4. கொஞ்சம் Carb, நிறைய Protein, மாத்திரைகள், ஓய்வு என்று சில நாட்கள் நகரும் ! அது தேவையான ஒன்று தான்.
5. புத்தகம் படித்தல், எழுதுதல், நல்ல மகிழ்வான மனநிலையை உருவாக்கும் படங்கள் பார்த்தல், நல்ல தூக்கம், தனிமை, அதிகம் பேசாது இருத்தல் .. தான் பெரும் தேவை. Stress மனநிலை நிலைமையை இன்னமும் மோசமாக மாற்றக்கூடும் !
6. அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடி சிறு உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா .. போன்றவைகளை செய்து கொள்ளலாம். மனநிலை மிக முக்கியம். உடலுக்கு மருந்து fine. ஆனால் மனம் மகிழ்வான / நிறைவான நிலையில் இருப்பது முக்கியம்.
மீள்வது முக்கியம் அல்ல. மீளும் விதம் முக்கியம். Stress / பயம் / Negative சிந்தனைகள் …எழுவதை தாமதப்படுத்தும்.
பயணிப்போம் – குறிப்பாக கடின காலங்களில் ஒன்றாக !
குறிப்பு ; இனி எனக்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் .. என்னால் மற்றவர்க்கு வரும் வாய்ப்பு இருப்பதால் .. ஒரு சில வாரங்களுக்கு. விலகியே இருப்போம்.
மருந்து கண்டுபிடித்து சரி செய்தல் எல்லாம் … இப்போதைக்கு ஆவது இல்லை. குறைந்தபட்சம் .. இன்னமும் ஒரு வருடத்திற்கு இந்த நிலை தொடரும்.
தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சர் பிரச்சினையும், மத்திய அரசுக்கு பீகாரில் யார் ஆட்சி பிரச்சினையும் தான் பெரியது. நமக்கு நம் வாழ்க்கை பெரியது என்பது மிக முக்கியமாக நம் நினைவில் இருக்கட்டும் மக்களே !





