Jerspective : 030
Snow and Mist are Representation of a Voice that Says .. ” Cool “



காட்சி 01 ;
படபடத்துக்கொண்டே இருக்கிறோம் – எதற்கெடுத்தாலும். கோபம், வேகம், அதீத வார்த்தை உபயோகம், இனம் புரியா படபடப்பு என்று வாழ்க்கை ஏனோ ஒரு இயந்திரத்தனமாகவே இருக்கிறது. என்ன காரணம் என்றே புரியவில்லை. Social Media முதல் TV வரை யார் யாரோ ஏதேதோ தகவல்களை அள்ளி தெளித்து கொண்டே இருக்கிறார்கள். நாமும் வாங்கி கொண்டே இருக்கிறோம். தகவல்களை மட்டும் அல்ல – பொருள்களையும் !



காட்சி 02 ;
யாருமற்ற அந்த உலகம் பனி மூட்டத்துடன் சிரிக்கிறது. கண்ணுக்கெட்டிய வரை பனி அதிகமாகவும் மண் கொஞ்சமாகவும் ஒரு களம் அது. காற்று உறைந்தே நகர்கிறது. முகம் சட்டென ஒரு ” நிறுத்தத்தை ” சந்திக்கிறது. பெரு வெளியின் ஏதோ ஒரு தன்மை நம்மை நிலைக்க வைக்கிறது. முகம் உடல் வார்த்தை மூச்சு இயக்கம் எல்லாமுமே .. சட்டென zero status க்கு வந்து அப்படியே நிற்கிறது – சிரித்த குழைந்த்தை த்தன முகத்துடன் !



காட்சி 03 ;
பனி எப்போதுமே அது பேசுவது இல்லை என்பதோடு நம்மையும் பேச விடாது செய்வது தான் பெரும் ஆச்சர்யம். பனி படர் காலங்களில் நாம் அதிகம் உண்பது இல்லை. அதிகம் பேசுவது இல்லை. அதிகம் தூங்குவது இல்லை. அதிகம் நடப்பது இல்லை. அனைத்துமே ஒரு வித ” சட்டென ஒரு நிறுத்தத்தை ” நோக்கி வந்துவிடுகின்றன. குறிப்பாக நம் மூச்சுக்காற்று எழுப்பும் சத்தத்தை நம்மால் கேட்க முடிவது பனிக் காலங்களில் தான் !



காட்சி 04 ;
இங்கே சிறிது நேரம் அமர்ந்து இருந்த போது எனக்குள் இருந்த பேரமைதிக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை. எல்லையற்ற பெரு வெளியில் .. சில்லென வீசும் பனிக்காற்றும் .. வெண் பூக்களாய் படர்ந்திருக்கும் பனியும் என்னவோ செய்கிறது. யாருமற்ற தேசத்தில் பனி என்னுடன் சேர சட்டென நான் யாருமற்ற தேசத்தில் இருந்து வெளியே எடுத்து .. ஏதோ ஒரு Creative உணர்வுடன் ஸ்நேகமானேன். அப்போது எழுதியவை எல்லாம் பின்னாளில் புத்தகமாக மாறியதும் அதிசயம் தான்.
பனி என்னை ” Cool Bro .. Life Happens Just Like that ” என்று தோளை தட்டி தொலைநோக்கோடு சொல்லிக்கொண்டே இருக்கிறது ! நானும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கான கவலைகளை அது எடுத்துக்கொண்டு உருகுகிறது. நான் அதன் பக்கங்களை எடுத்து எறிந்து சிறு குழந்தையாய் விளையாடுகிறேன். என்ன ஒரு பெரும் மன உதவி அது ! பனிக்கு எம் நன்றிகள் !!


