Jerspective : 037
” For Every Buddha, There will be an Unknown Shelter Somewhere “



நமக்கென்று ஒரு இடம் இந்த பூமியில் எழுதப்பட்டு இருக்கும். நமக்கென்று ஒரு குடும்பம், நமக்கென்று ஒரு தொழில், நமக்கு என ஒரு வாழும் விதம், நமக்கு என்று … ஏதோ ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதும் வாழ்வதும் தான் வாழ்க்கையின் Rhythm என்று மாறுகிறது. அதை கண்டுபிடிக்காத வாழ்வில் Rhythm இல்லை.
இவ்வளவு பெரிய பூமியில் இடம் ஒன்றை வாங்குகிறோம். அங்கே ஒரு வீடு கட்டுகிறோம். அந்த பகுதியை ” என் வீடு ” என்று சொல்லிக்கொள்கிறோம். அங்கே வாழ்கிறோம். ஒரு தலைமுறை / இரண்டாம் தலைமுறை / மூன்றாம் தலைமுறை … அந்த வீடு காணாமல் போகிறது. ” என் வீடும் ” இன்னொரு ” யாரோ ஒருவரின் அவர் அவள் வீடு ” என்று மாறிப்போகிறது. ஆனால் பூமி அங்கே சிரித்துக்கொண்டே இருக்கிறது – அதன் உண்மையான ” பூமி “என்கிற பெயரில் ! நமக்கென்று இருக்கும் இடமே .. சில வருடங்களுக்கு தான். அதன் பின் ? .. அது நிலமாகவே மாறுகிறது. எனவே …”நமக்கு என்பதும் ” சில காலத்திற்கு தான். ஆனாலும் அந்த சில காலத்திற்குள் ஒரு Rhythm ஐ நாம் அழகாக கண்டுபிடிக்க முடிகிறது. ரசிக்க முடிகிறது.
பெருவெளியாக இருக்கும் இந்த புகைப்படத்தில் .. கீழே மஞ்சள் Shelter ஒன்று புத்தனுக்காக சிரித்து கொண்டு அழகாய் நிற்கிறது. அங்கே இருக்கும் புத்தருக்குள்ளும் ஒரு Rhythm அழகாய் நிற்கிறது. அனைத்தும் சில காலம் தான். இந்த நொடி அந்த மஞ்சள் Shelter இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தால் மகிழ்ச்சி. இல்லாதும் போகலாம் என்று புரிந்தால் நமக்கு பெரும் மகிழ்ச்சி. நிலையற்ற தன்மையின் புரிதலில் தான் ” எங்கோ யாருக்கோ எதற்கோ ” என்று ஒரு வரி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்று இதேபோல பல மஞ்சள் Shelter உருவாகி இருக்கவும் கூடும். யாருக்கு தெரியும் ?
சரி இதெல்லாம் இருக்கட்டும். அந்த மஞ்சள் Shelter உள்ளே இருக்கும் புத்தருக்கு முன்னே சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்வதை உங்களால் யோசிக்க முடிகிறதா ? மலையளவு வெளி அமைதியில், மன அளவு மௌனத்தில் , பேசும் காற்றுக்கும், துளைக்கும்.குளிருக்கும் இடையில் … புத்த முகம் மனதில் நிற்க முடிந்தால் …நீங்களும் நானும் ஒன்றே !