Jerspective : 045
” Life Happens .. Just Do Whats to be Done and Get Back Home ” ( Early 
)
செய்ய வேண்டியதை செய்தாயிற்றா ? சரியாக ? செழுமையாக ? சிறப்பாக ? எந்த வித Guilt feel ம் இல்லாமல் ? முழு அர்ப்பணிப்புடன் ? மற்றவர்க்கு உதவும் வகையில் ? நமக்கும் மகிழ்வு தரும் வகையில் ? இல்லை எனில் முதலில் அதை செய்வோம். ஆம் எனில் .. அமைதியாக விரைவாக வீடு திரும்புவோம். வாழ்க்கை அதன் போக்கில் அழகாக நமக்கு மலரும் !
வீடு திரும்புதல் ஒரு பெரும் நிகழ்வு. வீட்டில் இருந்து கிளம்புதல் .. கடமை. செய்தாகவேண்டிய கட்டாயம். ஆனால் வீடு திரும்புதல் ? – என்னவோ தெரியவில்லை ? வீடு திரும்புகிறோம் என்றாலே மனம் முழுக்க மகிழ்வு தான். மனம் முழுக்க ஒரு வித துள்ளல் நிலை தான். அப்படி வீட்டில் என்ன தான் இருக்கிறது ? வீடு – என்பது Rules இல்லாத ஒரு Space ! ( அதுதான் முதல் மற்றும் கடைசி Rule ! 
). எவ்வித Rules ம் இல்லாத சுதந்திரமாக நம்மை நாம் புதுப்பிக்க உதவும் களம். நம்மை நாம் உணர்ந்து மற்றவர்களையும் உணரவைத்து … மகிழ் நிலையை உடலால் உள்ளத்தால் சூழ்நிலையால் …பெற முடிந்தால் மட்டுமே அது வீடு. இல்லை எனில் ? அதுவும் ஓர் அலுவலகமே !
எங்கள் வீட்டில் Strict Rules இருக்கே சார் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வீட்டில் Strcit Rules கொண்டு வந்தால் .. ? மிக சுலபமான பதில் இருக்கிறது. ” முதலில் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். ” என்று உள்ளே ஒரு குரல் கேட்கும். பின் ” இவர்கள் எல்லாம் யார் ? ” என்று ஒரு அந்நியத் தன்மை வளரும். பின் .. ” அருகே இருந்து என்ன புண்ணியம் ? ” என்ற கேள்வி எழும். கடைசியாகத் தான் .. ” நானே என் வாழ்க்கையை பார்த்து கொள்கிறேன் ” என்று சொல்ல தோன்றும். அதற்கு பிறகு .. ” நீ யாரோ நான் யாரோ ” தான் ! இது அனைத்தும் எதற்கு ? Strict Rules ஐ follow செய்ய ! எதற்காக எதை இழக்கிறோம் ? Rules க்காக மனிதர்களையா ? ஹஹஹ.. யோசிக்க வேண்டிய களம் இது.
அந்த மனிதர் பாடிக்கொண்டே தான் அந்த ஆடுகளுடன் பயணித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு நான் கவனித்துக்கொண்டிருந்தேன். என்னை கடக்கும்போது ஒரு நட்பு சிரிப்பொன்றை சட்டென சிலிர்ப்பாய் தெளித்து விட்டு கடக்கையில் கேட்டார்…
” வீட்டுக்கு போகலையா ? நேரம் ஆச்சு “
என்னவோ செய்தது அந்த கேள்வி.
” செல்கிறேன் ” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
” சூரியன் மறைய மறைய வீடு அடைந்து விட வேண்டும். அப்ப தான் ஆட்டுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும் “
அவர் ஆட்டுக்கு சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை. சொன்னது மனிதர்களுக்கு ! வேலை முடிந்தவுடன் வீடு திரும்பும் மனிதனுக்கு பிரச்சினைகள் மிக குறைவு. வேலை முடிந்து வீடு திரும்பாமல் “வேறு வேலைகளை ” ஆரம்பிக்கும் மனிதனுக்கு … வாழ்க்கை அமைவதே இல்லை. அவன் எப்போதும் எதையோ இழந்தவன் அல்லது திடீர் என பெற்றவன் போலே ஓடிக்கொண்டே இருக்கிறான். அல்லது நின்ற இடத்தில் மூச்சு வாங்கிக்கொண்டே இருக்கிறான்.
நாம் என்னவாக இருக்கிறோம் ? ” வேலை ” முடிந்தும் ” வேறு வேலைகளை “செய்து கொண்டிருக்கிறோமா ? ( எவை எல்லாம் கடமையில் வரவில்லையோ அவை எல்லாம் ” வேறு வேலைகள் ” 
)
என்ன ? Rules அற்ற வீட்டுக்கு திரும்ப ஆரம்பித்தாயிற்றா ?





