Jerspective : 046



அந்த காலத்து அறிவு இது ! Computer Calculator Software … ஒன்றும் இல்லை அப்போது. ஆனாலும் எப்படி இது முடிந்தது ?
ஒரு கோவில் அதில் இருந்து பத்து படிக்கட்டுகள் இறங்கினால் ஒரு சம தரை. அங்கே இருந்து ஒரு 10 படிக்கட்டுகள் இறங்கினால் .. ஒரு அழகிய குளம் ! நம் மொழியில் சொன்னால் .. Minus 2 – Ground Floor இல் ! இந்த அறிவுக்கு திறமைக்கு கணித பார்வைக்கு அந்தக் கால கட்டிடவியலாளர்கள் என்ன கற்றிருக்க முடியும் ? என்ன கற்றுக்கொடுத்திருக்க முடியும் ?
முதல் Floor இல் ( Minus 01 ) ஒரு சிறு கோவில் கோபுர அமைப்பு. அதன் வெளிப்புற உட்புற சிலைகள். அதற்கு என்று ஒரு சிறு வழி .. எப்படி இதெல்லாம் Possible ? இதனுடைய Mega Version தான் எல்லோரா ! அப்படி எனில் அப்போது இருந்த அறிவுக்கு தரைக்கு உள்ளே வெளியே மேலே என்று அனைத்து வித பார்வைகளும் அதற்கான கணித அறிவும் இருந்திருக்கிறது. எங்கே போனது இவை எல்லாம் ?
Camera விற்கு ஒரு குணம் உண்டு. சதுர வடிவில் நாம் புகைப்படம் எடுப்பதால் .. கட்டப்பட்டது சரியில்லை எனில் நேர்கோட்டில் புகைப்படம் வராது போகும். நமக்கு நன்றாகவே புரியும் .. இது சரியாக கட்டப்படவில்லை என்பது. இன்று வரை நான் சந்தித்த கோவில்களில் .. அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்படவே இல்லை. அனைத்துமே Picture Perfect தான் !
இந்த மனித அறிவின் வாரிசுகள் என்ன ஆனார்கள் ? இந்த மனித அறிவின் கல்விக்கூடங்கள் என்ன ஆகின ? எங்கே இருக்கிறார்கள் ? இருக்கிறார்களா இல்லையா ? கேள்விகள் எனக்குள்ளே உறுத்திக்கொண்டே இருக்கின்றன.
உங்களுக்கு ?


