நான் எனப்படும் நான் : 102



இந்த புகைப்படம் சமீபத்திய நாட்களில் எனக்கு மிக மிக பிடித்த ஒன்றாக இருக்கிறது. காரணம் ?
Zenlp Trainer, Counsellor, Photographer, Writer, Reader, Traveller …என்று பல அடையாளங்கள் எனக்கு இருந்த போதும் … மிக யதார்த்தமாக இருக்கும் வாழும் என்னை Represent செய்யும் படமாக இது அமைவதால் …இந்த புகைப்படம் எனக்குள் மிக அழகாக வருகிறது. நிற்கிறது. இப்படி குதித்து எடுக்கும் புகைப்படங்கள் என்னுடன் நிறைய இருக்கின்றன.
@தீரா உலா
வில் இது ஒரு Trademark Jump ஆக மாறி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி !
நான் நினைத்ததை நான் செய்வதை எனக்கு Represent செய்யும் புகைப்படம் தான் இது. மேலே நான் சொன்ன பல அடையாளங்கள் என்னை இப்படி குதிப்பதை தடுப்பதில்லை. எனக்குள் இருக்கும் குழந்தை ஒன்று இந்த ஒரு சில micro நொடிகள் Jump ல் என்னை தூக்கி பிடித்து காண்பித்து விட்டு மறைந்து விடும். அந்த சில Micro நொடிகள் குழந்தை தான் என் யதார்த்த அடையாளம் ! மேலே சொன்ன அடையாளங்களுக்குள் நான் என்னை தொலைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் இந்த Jump எனக்குள் ஒரு நிறைவை கொடுக்கும் ஒன்றாகவே ஒவ்வொரு முறையும் மாறுகிறது.
ஒரு முறை Rann of Kutch ல் இப்படி குதித்து எடுத்த புகைப்படம் இன்னமும் நினைவில் இருக்கிறது. முழுக்க வெண்மையாய் இருக்கும் தரையில் மேலே இப்படி குதித்து எடுத்த அந்த புகைப்படமும் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. அதையும் இங்கே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. சரி. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ?
சேத்துமடைக்கு நீங்கள் சென்றது உண்டா ? அப்படி எனில் .. வழியில் இந்த இடத்தை காணலாம். உங்களின் இப்படியான பயண Trademark படங்களை comment ல் பதிவிடுங்களேன். ரசிப்போம்.
Pc ;
Shankara Narayanan
. நன்றிகள் அவருக்கும்.


