நான் எனப்படும் நான் : 106
2013 ன் மீள் புகைப்படம் இது.
” கனவுகளையும் இலக்குகளையும் புரிந்து கொள்ளும் ஒருவரின் துணை கிடைப்பின் … அந்த பயணத்தின் அர்த்தம் அழகாக மாறும். அந்த துணை நமக்கு நாம் மட்டுமே என்னும்போது பயண வேகம் இன்னமும் அதிகரிக்கும் “



நமக்கு ஏன் நம் கனவுகளை புரியும் மனித துணை வேண்டும் ? பதில் மிக எளிது. ஆம். சொல்லாமல் புரிதல் – என்று ஒரு வார்த்தையும் அதற்குள் பொதிந்து இருக்கும் அழகும் தான் பதில். சொல்லாமல் புரிதல் ஏன் வேண்டும் ?
ஒரு காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் நம்மை புரிந்த ஒருவர் காபி போட்டுகொண்டு வந்து நின்றால் ?
ஒரு இலக்கை நாம் மனதில் நினைக்கிறோம். அந்த இலக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் அதே இலக்கை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் ?
உடல்நிலை சரியில்லாது போகிறது. நம்மை எப்படி ஒருவர் கவனிக்க வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. அப்படி ஒருவர் நாம் எதுவும் சொல்லாமல் கவனித்தால் ?
மேற்சொன்ன உதாரணங்களில் ” நினைத்த ஒன்றை சொல்லாமல் செய்தால் ” என்ற வார்த்தை சுயநலம் போல் தெரியக்கூடும். ஆனால் அப்படி இல்லை. ” நினைப்பதை சொல்லாமல் செய்யும் ” துணை இருந்தால் வாழ்க்கை அழகு. அங்கே சொல் மௌனமாகிறது. புரிதல் பேச்சு இல்லாது பேசுகிறது. செயல்களில் சிரிப்பு என்னும் behavior கலந்து .. மகிழ் மணம் வீசுகிறது. அங்கே பிரச்சினைகள் வராதா ? வரும். கண்டிப்பாக வரும். ஆனாலும் தீர்வுகள் சொல்லாமல் நிகழும். அதுதான் துணையின் அழகு. இருந்தால் அப்படி ஒரு துணையுடன் வாழ வேண்டும். இல்லை எனில் ? நாமே நினைத்து நாமே செய்வது என்ற அழகு உதயமாகும். இங்கே எதுவும் சரி தவறு இல்லை. மனித நியாயங்கள் காலம் சார்ந்தவை. ஆச்சர்யமாக ஒரு மனிதனின் மறைவிற்கு பின் … அந்த நியாயங்கள் பலருக்கு புரியவரும்.



இந்த உடை எனக்கு மிக முக்கியமான ஒன்று. குஜராத்தில் ஒரு பள்ளியில் என் பயிற்சி வகுப்பினை attend செய்த பெண் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து வாங்கி கொடுத்த ஆடை இது ! அதெல்லாம் சரி … தோள் பட்டையில் Flip வைத்து, கை மடித்து Flip ஐ Button உடன் இணைத்து.. அணியும் இந்த உடை style எனக்கு பிடிக்கும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும் ? ஆம். அங்கே தான் சொல்லாமல் புரிதல் வருகிறது.
என்ன ” சொல்லாமல் சொல்பவை ” என்கிற Concept இப்போது … புரிகிறதா ?


