#SloggingSongs : 014
” அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ”
அசையும் குளம் – என்ன ஒரு உவமை ! அசையும் ஏரி. அசையும் மலை. அசையும் கடல். எல்லாமே அழகுதான். வாழ்வின் ஓட்டத்திற்கு பிரச்சினை இல்லாத வரை !.
#ஏன்பெற்றுக்கொள்கிறார்கள் ?
இரவு 02.00 மணி. கதவுக்கு வெளியே அப்படி ஒரு சத்தம். தூக்க நேரத்தில் என்ன சத்தம் என்று வெளியே வந்தால் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் என்னவோ பிரச்சினை. ஒரே சத்தம்.
விஷயம் இதுதான். ஒரு வடக்கு இந்திய குடும்பம். சாவியை உள்ளே வைத்து auto lock செய்துவிட்டார்கள். இது மதியம்.
சில பாடல்கள் நம்மை கடந்த மகிழ் காலத்திற்கு சட்டென கொண்டு சென்று விடும். அப்படி ஒரு பாடல் இன்று என்னுடன் பயணிக்க … அதை பற்றி பகிர நினைக்கிறேன்.
கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?
கடிதத்தின் வார்த்தைகள் – கடைசியாய் கடிதம் எழுதியது எப்போது ?
#நம்பிக்கைமனிதர்கள்
#RoleModel – Viswa Srikar
பல வருடங்களாக அவரை கவனிக்கிறேன். அமைதி அவரின் பலம். தனக்குள் இருக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் அவருக்குள் நிறைய கேள்விகள். அந்த கேள்விகளுக்கு பதிலையும் அவரே கண்டுபிடித்து, அதே அமைதியுடன் பயணிப்பதே அவரின் சிறப்பான நிலை.
Fitness அவருக்கு மிகப்பிடித்த விஷயம். அதையே வாழ்வியலாக எடுக்க மனதிற்குள் திட்டம்.
#Jerspectives
அப்போதுதான் கவனித்தேன். ஆனால் அதற்குள் அந்த புறா எம் நடை சத்தம் கேட்டதும் பறந்துபோனது. அது முதல் நாள். ஏன் அப்படி பறந்து போனது ? ஏன் என் மேல் அப்படி ஒரு அவநம்பிக்கை அதற்கு ? யோசித்துக்கொண்டே மொட்டை மாடியில் வலம் வந்தேன். அதை காணோம்.
இரண்டாம் நாள். புறா இப்போது பறக்கவில்லை.
#SloggingSongs ; 012
” பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூ பூப்பதில்லை ”
என்னவோ இந்த வரி வேண்டாம் என்கிறது மனம். பூ மென்மைக்கான உருவகம் என்பது சரி. பெண் மென்மையானவள் என்று சொல்ல முற்படுவதும் ஒரு பார்வையில் வேண்டுமானால் சரி.
நல்ல தூக்கத்தை நமக்கு தருவது சூரிய ஒளி என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். அறிவியல் அதை நிரூபிக்கிறது. மிக முக்கியமான இந்த உண்மையை இப்போது கவனிப்போம்.
நம் உடலில் இருக்கும் ” Circadian Timing System ” , மூளையில் இருக்கும் Hypothalamas இல் – ஒரு குழுவாக இருக்கும் நரம்பு செல்களால் இயக்கப்படுகிறது.
#SloggingSongs 011
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழிவதா ? அது எப்படி முடியும் ? நாம் இதுவரை சுகம் என்றால்
” பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு! ”
நீர் சென்ற பின் தான் துணிகளில் சிறு space இருப்பதே நமக்கு தெரியும். அப்படி இருக்கும் உறவுகள் அழகானவை. வெளியே அப்படி ஓர் உறுதி. ஆனால் உள்ளே அழகான space.
#SloggingSongs : 009
” அன்பே அன்பே
நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான்
இற்று போனேனே ”
சேரவில்லை எனில் ஆவி இற்று போகிறோம் எனில், சேர்கிறோம் எனில் ஆவியாகிப்போகிறோம் என்று தானே பொருள் ஆகும். சேர்வதால் ஆவியாகிப் போகுதல் ( ஆச்சர்யமாக ஆங்கிலத்தில் .. Smoking hot 😊😊 )