” இந்த ஐவரினும்
வேறென் மகிழ்ச்சி
வேண்டும் எனக்கு? ”
– கொரிய கவிதை
_______________________________
ஐம்புலன்கள் போல் ஒரு பலம் உண்டா நமக்கு ? காண்பதில் நல்லவற்றை எடுத்து வாழும் பக்குவம், கேட்பவற்றில் அனுபவத்தை உடன் உள் பதிக்கும் திறமை, உணர்பவற்றில் எதிர்காலம் நோக்கி உந்தி தள்ளும் உணர்வை வைத்துக்கொள்வது, சுவையில் ஆரோக்கியத்தை மனத்தில்
ஏதோ Beach : காலையில் #slogging ECR இல் செய்ய ஆரம்பிக்க, 10000 steps முடித்தவுடன், கண்ணில் பட்ட ஒரு ஏதோ Beach நோக்கி கால்கள் நடக்க ஆரம்பித்தன. பொதுவாக beach என்றாலே ” அந்த beach ” ” இந்த beach ” என்று பெயரிடப்பட்டு, தன் அடையாளம் இழந்த, வியாபார மயமான
மதுரையில் / சேலத்தில் இருந்து வருகிறீர்கள். OMR செல்ல வேண்டும் என்றால் .. பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பாதை தாம்பரம் – வேளச்சேரி – OMR வழி. ஆனால் இனி .. அப்படி தேவை இல்லை. செங்கல்பட்டில் இருந்து, திருப்போரூர் செல்லும் வழியை தேர்ந்தெடுத்தால் …ஒரு 40 நிமிடங்களில் OMR செல்ல
” சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது ”
– பிரமிள்
________________
இதோ ஒரு இறகு ! :
வாழ்கிறோம். வாழ்ந்த தடம் ஒன்றை பதிகிறோம். பின்னர் மறைகிறோம். அப்படி நாம் பதிந்த தடமே நம்மை பற்றி சொல்லும் சாட்சியாக மாறும்.
ஒரு சில வார்த்தைகளை கேட்கும்போது, அவற்றிற்கான பதில் .. சில நொடிகளில் மனதில் வந்து விடுகிறது. ஆனால் … அவற்றை சொல்வதற்குள் ….
1. வார்த்தைகளை இன்னும் அழகுபடுத்துகிறோம்
2. வார்த்தைகளால் இன்னும் அசிங்கப்படுத்துகிறோம்.
3. பதில் பேசுவதில்லை.
4. பதிலை வேறு ஒருவருடன் பேசுகிறோம்.
01 :
நினைத்ததை பேசும் முன்பு, வார்த்தைகளை
நீண்ட நேரம் அடுக்களையில் இருந்து ஒரு கேக் தயாரிக்கிறீர்கள். அக்கம்பக்க நட்புக்கள் வீட்டின் வரவேற்பறையில் பேசி சிரித்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெண் உங்களை அடுக்களையில் பார்க்க வருகிறார். ” வெளியே போ . இங்கே உனக்கு என்ன வேலை ? ” என்று சத்தமாக பேசுகிறீர்கள். அவர் அதிர்ந்து வெளியேறுகிறார். கேக் தயாரிக்கப்பட்டு நிற்கிறது.
FAKE ID – இந்த முகமூடியில் திரியும் மறுபக்க மனங்களை கொஞ்சம் கவனிப்போம். இவர்களின் நிலை பரிதாபமானது. தான் நினைப்பதை, நினைப்பவரிடம், தன் முகம் கொண்டு, சொல்ல முடியாதவரின் ஒரு நிலை போல பரிதாப நிலை உண்டா இந்த உலகில் ?
” எல்லாத்தையும் மறைச்சியே, அந்த கொண்டைய மறைச்சியா ? ” என்று கேட்கும்
ஒரு பிரச்சினை வருகிறது. மனத்திற்குள்ளும் அது வரும். மனதிற்குள் வரும் பிரச்சினை, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளை பட்டியல் இடும். பட்டியல் அனைத்தும் negative ஆகவே இருப்பது ஆச்சரியமே. இது ஒரு chain reaction. ஒரு விளைவு இன்னொரு விளைவை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.
முதுகில் வலி. இது ஒரு பிரச்சினை.
” என்னமோ தெரியலை ..
மற்றவர்களை ஏமாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். நம்மை நாம் ஏமாற்றிக்கொள்கிறோமே .. இதை என்றாவது யோசிக்கிறோமா ?
” நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை ” என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உள்ளே ஒரு குரல் கேட்குமே .. ” ஏய் .. நீ அப்படித்தான். ஏன் பொய் சொல்கிறாய் ? “. அந்த குரலையும்
பள்ளிபாளையம் – ஈரோடு வழியே செல்லும்போது காவிரி பாலம் ஒன்று வரும். அதன் அருகே இருக்கும் தேநீர் கடை ஒன்றில் காலை நடையின் போது தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு எனக்கு. அப்போது பார்த்த ஒரு காட்சி இது.
மிகவும் வயதான கிழவி ஒருத்தி அமர்ந்து பிச்சை கேட்கிறாள். அந்த பக்கமாய் ஒல்லியான தேகத்துடன் நடந்து