முதல் முதலாக புகைப்படம் எடுத்த போது, என் நண்பன் சொன்னான் … ” சரியா எடுக்கலைடா நீ ? பாதி முகம்தான் இருக்கு. மீதியை காணோம் ? ” … அப்போதுதான் புகைப்படம் என்று ஒன்றை பார்த்தேன். அதற்க்கு முன் வரை புகைப்பட கருவியை உபயோகிப்பதே பெரிய சாதனையாக நான் நினைத்திருந்தேன். புகைப்படங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
என்னிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்வி … ” எப்படி இந்த பயிற்சியாளர் துறையை தேர்ந்து எடுத்தீர்கள் ? “
அப்பாவிற்கு முதல் கைதட்டல். கல்கண்டு, அம்புலிமாமா… வாங்கி கொடுத்து படிக்க சொல்லியபின், மெதுவாக என்னை நூலகத்திற்கு இழுத்து சென்ற மனிதர். அங்கிருந்து நான் புத்தக வில்லைகளால் உலகம் படிக்க ஆரம்பித்தேன். கள்ளக்குறிச்சியின் நூலகத்திற்கு, அத்துணை நன்றிகளும்.
வாழ்க்கையின் விதிகள் நிறைய பேருக்கு புரிவதில்லை. வெற்றி பெற்றதாகவும், தோல்வி பெற்றதாகவும் நினைத்துக்கொண்டு, சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வாழும் பலரை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அந்த மனிதரின் பேச்சு அப்படி இனிப்பாக இருந்தது. எங்கோ நடிக்கிறார் என தெரிந்தாலும், நோக்கத்தின் நன்மை கருதி அவருடன் பயணிக்க தயாரானேன். சில மாதங்களில் அவர் தன் முகத்திற்கு பூசிக்கொண்ட சாயம்
உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்கிற என் எண்ணத்திற்கு மாற்று இல்லை. ஆனால் …
பயணங்களின் போது உணவும் உடற்பயிற்சியும் கடை பிடிக்க முடியாமல் போவது எனக்கு மிகவும் வருத்தமான விஷயம். கடைசி ஏழு நாட்களில் ஆறு விருந்து அழைப்புகள். தவிர்க்க முடியவில்லை. உடலா, அன்பா, மறுப்பா, ஆரோக்கியமா, நழுவலா . என்ற கேள்களுக்கு
நீண்ட நாளைக்கு பின் திடீரென்று தோன்றிய ஒரு வினாடி சிந்தனை என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ” சர்ச்சுக்கு செல்ல வேண்டும் “.
ஐந்தாம் வகுப்பு வரை Danish Mission பள்ளியில் படித்தபோது தான் சர்ச் எனக்கு முதலில் அறிமுகமானது. சர்ச்சின் உயரம் தான் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அந்த உயரத்தின் மேல்புறம் தெரியும்
எனக்கு என்னை மிகவும் பிடித்த தருணமாக இருக்கும் தருணங்களில் ஒன்று நான் எவ்வித ஒப்பனையும் இன்றி நானாக இருப்பது. கன்னங்களில் வளர்ந்த தாடி எனப்படும் கேசம், வண்ணம் தீட்டப்படாமல் இருப்பதில் என் இயல்புத் தன்மை தொடங்குவதை நான் உணர்கிறேன். வண்ணம் தீட்டிய காலகட்டங்களில் கிடைக்கும் ஒரு செயற்கை ‘அட’ அழகை இந்த உலகம் விரும்புவதை கண்டு
” இந்த உலகம் ஒரு வேகமான பாதுகாப்பற்ற உணர்விலேயே இயங்குகிறதோ என எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது ” – என் நண்பரின் குரல்.
” ஏன் அப்படி ” நான் மென்சிரிப்புடன் கேட்டேன்.
” பள்ளியில் படிக்கும்போது மருத்துவப் படிப்பு முதன்மையாக காண்பிக்கபடுகிறது. கல்லூரியில் படிக்கும்போது ஐந்து இலக்க ஆரம்ப சம்பளம் சொல்லப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பின் அவளை சந்தித்த போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பமும் நுரையாய் எழுந்தது. அவளும் என்னை கவனித்து விட்டாள். அநேகமாய் அவளுக்குள்ளும் அதே குழப்பங்கள் இருக்க கூடும்.
கல்லூரி நாட்களில் அவள் பலரின் கதாநாயகி. படிப்பு, திறமை, அழகு, அமைதி, கொஞ்சம் நகைச்சுவை என எல்லாம்
மனிதர்களை நான் மன்னிக்கிறேன். தினம் தினம். அப்படி மன்னித்த ஒருவரை சில வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது. அவர் பேச ஆரம்பித்தார் …
” பேசுவாயோ மாட்டாயோ என்று நினைத்து இருந்தேன். பரவாயில்லை பேசுகிறாய். நான் அப்போது செய்தது தவறுதான். அதை இப்போது உணர்கிறேன். ” என்று
பேச்சு நகர்ந்தது.
நான் சிரித்துவிட்டு தொடர்ந்தேன் …
சரி. அவனுக்கும் அவளுக்கும் சரி வரவில்லை. என்ன செய்யலாம் ? முதலில் அவன் செய்வது என்ன என்று கவனிப்போம்.
அவளை எதிரியாக பார்க்க ஆரம்பிப்பான். 10 /15 / 20 வருடங்கள் உடன் இருந்தவள் என்பது எல்லாம் திடீர் என்று மரத்து, மறந்து போகும் அந்த அவனுக்கு. அவளை வீட்டிற்குள் முடக்கும் அத்தனை செயல்களையும் செய்ய