” இந்த உலகம் ஒரு வேகமான பாதுகாப்பற்ற உணர்விலேயே இயங்குகிறதோ என எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது ” – என் நண்பரின் குரல்.
” ஏன் அப்படி ” நான் மென்சிரிப்புடன் கேட்டேன்.
” பள்ளியில் படிக்கும்போது மருத்துவப் படிப்பு முதன்மையாக காண்பிக்கபடுகிறது. கல்லூரியில் படிக்கும்போது ஐந்து இலக்க ஆரம்ப சம்பளம் சொல்லப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பின் அவளை சந்தித்த போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பமும் நுரையாய் எழுந்தது. அவளும் என்னை கவனித்து விட்டாள். அநேகமாய் அவளுக்குள்ளும் அதே குழப்பங்கள் இருக்க கூடும்.
கல்லூரி நாட்களில் அவள் பலரின் கதாநாயகி. படிப்பு, திறமை, அழகு, அமைதி, கொஞ்சம் நகைச்சுவை என எல்லாம்
மனிதர்களை நான் மன்னிக்கிறேன். தினம் தினம். அப்படி மன்னித்த ஒருவரை சில வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது. அவர் பேச ஆரம்பித்தார் …
” பேசுவாயோ மாட்டாயோ என்று நினைத்து இருந்தேன். பரவாயில்லை பேசுகிறாய். நான் அப்போது செய்தது தவறுதான். அதை இப்போது உணர்கிறேன். ” என்று
பேச்சு நகர்ந்தது.
நான் சிரித்துவிட்டு தொடர்ந்தேன் …