கவிதையின் கண்
ஒரு கவிதை படிக்கிறோம். உடனே மனம் எளிதாகிறது அல்லது கனக்கிறது. ஏன் அப்படி ?
யாரோ ஒருவனின் ஒருத்தியின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பக்கத்தை தான் ஒரு கவிதை பேசுகிறது. அப்படி பேசும் கவிதையின் மௌனம் தான் இங்கே ஆச்சர்யம். ஒரு கவிதை சொல்வதை ஒரு நட்பு சொல்லும்போது நமக்கு மிகவும்
Spanish கவிதை ஒன்று சட்டென உள்ளே ஈர்த்தது. படிக்க படிக்க ஒரு dimension, இரண்டு, மூன்று என்று … நகர்ந்து என்னவோ செய்தது. கவிதையின் கண் அவ்வளவு பலம் வாய்ந்தது.
A Dream :
புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி.
கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு
” இந்த ஐவரினும்
வேறென் மகிழ்ச்சி
வேண்டும் எனக்கு? ”
– கொரிய கவிதை
_______________________________
ஐம்புலன்கள் போல் ஒரு பலம் உண்டா நமக்கு ? காண்பதில் நல்லவற்றை எடுத்து வாழும் பக்குவம், கேட்பவற்றில் அனுபவத்தை உடன் உள் பதிக்கும் திறமை, உணர்பவற்றில் எதிர்காலம் நோக்கி உந்தி தள்ளும் உணர்வை வைத்துக்கொள்வது, சுவையில் ஆரோக்கியத்தை மனத்தில்
” சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது ”
– பிரமிள்
________________
இதோ ஒரு இறகு ! :
வாழ்கிறோம். வாழ்ந்த தடம் ஒன்றை பதிகிறோம். பின்னர் மறைகிறோம். அப்படி நாம் பதிந்த தடமே நம்மை பற்றி சொல்லும் சாட்சியாக மாறும்.
வீசும் காற்றினைக் கேளுங்கள்
அடுத்து எந்த இலை
இந்த மரத்தை விட்டுச் செல்லுமென்று.
– ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்று.
_______________________________________
இலைகள் சூழ் பெரு மரம் அது. வருடங்களாய் வாழ்வது. ஒரே ஒரு காற்று அந்த பெரு மரத்தின் ஒரு இலையை நோக்கி தன் பேச்சினை ஆரம்பிக்கிறது.
” என்ன .. விட்டு செல்ல
காலைத்தேநீர் அருந்தும் துறவி
பூ மலர்வது போல்
அமைதி !
– ஜப்பானிய ஹைக்கூ
_______________________________________
நீங்கள் கவனித்தது உண்டா ?
காதில் Headphone வைத்தவுடன், மூச்சுக்காற்று அழகாக கேட்க ஆரம்பிக்கும்.
சிறு உடல் அசைவுகளும் அழகாய் உணர முடியும்.
நெட்டி முறிப்பது எல்லாம் backdrop effect music போல கேட்கும்.
கால் நகர்வதின் Rhythm
” அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் ? ”
– அமுதபாரதி
_______________________________________
மிகவும் யோசிக்க வைத்த கவிதை. ஒரே வரி. மூன்று பகுதி. மூன்றாவது பகுதி கொண்டுவருவது ஒரு கேள்வி. சிந்தனை கூட்டில் கல் எரிந்த கேள்வி அது. இனி தேனீக்கள் வசம் எண்ண உலகம் !
ஒருமுறை அஸ்ஸாம் மாநில பள்ளி
“ஒரு மலர் இதழில் ..
மௌனமாக நிற்கும்
பாறைத் தூணில் ..
மனம் தன்
” தன்மயத்தை ” இழக்கிறது ! ”
– பிரமிள்
_______________________________________
மனம் “தன்மயத்தை ” இழத்தலை நீங்கள் உணர்ந்தது உண்டா ?
எங்கு ” நீங்கள் ” என்ற எண்ணம் ” நீங்களில் ” இல்லையோ .. அங்கு
உலக சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று ஒரு
இலாப நஷ்ட
கணக்கிருந்தால்
விஷயம் வேறு
– நகுலன்
_______________________________________
நிறைய மனிதர்களை கவனிக்கிறேன். ” நான் இல்லாவிட்டால் என் நிறுவனம் அவ்வளவுதான் ” என்கிற தொனியில் அவர்களின் பார்வை இருக்கும். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அலுவலகம் செல்வார்கள். ( வீட்டிற்கு, சொல்லிய
வாழ்க்கை :
” கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும் ..
பார்க்காமலே அறிந்துகொள்கிறார். ”
_______________________________________
நா.முத்துக்குமார் எழுதிய இந்த கவிதை ஏற்படுத்தும் அதிர்வுகள், எறியப்பட்ட கல் நீருக்குள் அடங்கிய பின்னும் எழும் அலையாக நகர்கிறது – உள்ளிருந்து வெளிப்புறமாக ! நம்மை தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை கடவுள்/இயற்கை என்று