#நாலடியார் 03
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச் ( 1 )
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை (2 )
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட ( 3 )
மனையாளை மாற்றார் கொள
பெரும் அரசராக, யானை மேல் குடை நிழலில், அமர்ந்து பெருமிதமாக
#நாலடியார் 02
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் ( 1 )
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க (2)
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் (3 )
சகடக்கால் போல வரும் (4)
பெருஞ்செல்வம் என்றாலும் வண்டிச்சக்கரம் போல நிலையாக இல்லாமல் மேலும் கீழுமாய் மாறும். ஆக ..
#நாலடியார் 01
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
” அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிருப்பர் ஒரிடத்துக் கூழ்எனின் செல்வம்
ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று. “
( மூன்றாம் வரியின் அமைப்பை கருதி ஒரே எழுத்தை தனியாகவும் பின் நான்காம் வரியையும் சேர்த்திருக்கிறேன் )
பொருள்
என்ன இது ?
ஒரு புது தொடரினை ஆரம்பிக்கிறேன். நாலடியார் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது அப்படி என்றால் என்ன ? என்ற கேள்வியும் எழலாம். Google செய்தும் பார்க்கலாம். அந்த புத்தகத்தின் கவிதை வரிகளையும் அதற்கான தமிழ் விளக்கங்களையும் இங்கே கொடுக்கிறேன். மொத்தம் 400 பாடல்கள். ஒவ்வொன்றாக இங்கே கொடுக்கிறேன். இதற்கு பின்