மனிதர்களிடம் எப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. எதை நோக்கியோ, எதற்காகவோ, சென்று கொண்டே இருக்கிறார்கள். நகர்தல் இயல்பு எனினும், தேடலுடன் கூடிய நகர்தல் எழுப்பும் சில கேள்விகள், இன்னும் பதில் கண்டுபிடிக்க முடியா கேள்விகளே. அப்படி எதை தேடி நகர்கிறோம் ?
நாம் தேட முயற்சிப்பது பணம் என்று ஒரு குரல். இல்லை
மென் தூறலும், பனிப்புகையும், தனி சாலையும், விரும்பும் வாகனமும், புகைப்பட கருவியும், போதுமான தனிமையும் .. வேறென்ன வேண்டும் ?
என்னவோ தெரியவில்லை.. குளிர் சார் தட்ப நிலை என்னை வேறு உயரத்திற்கு அழைத்து செல்கிறது. அங்கு சிந்தனைகளின் வீச்சு வேறு நிலையில். காட்டில் காற்றில் ஆடும் ஒரு பச்சை மரம், எனக்கு சொல்லும் தாலாட்டில்,
சிறு தூறல்.
யாருமற்ற சாலை.
மென் பழைய நினைவுகள்.
பள்ளி விட்டு திரும்பும் மாணவன்.
வான் பார்த்து அமர்ந்திருக்கும் முதியவர்.
என்னை கடக்கும் புதுமல்லி வாசம்.
தொலை தூர வெளிச்சம்.
100ல் வாகனங்கள்.
சிறு தூறல்.
அத்தனையும் கடந்து, நடந்து செல்லும்போது எதிர்ப்படும் மனிதர்களின் முகத்திற்கு, ஒரு சிரிப்பை வழங்கி, நடக்கும்போது… சில பதில் சிரிப்புகள்,
திடீர் இரவு விழிப்பை கண்ணில் வைத்துக்கொண்டு, என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிகாலை விழிப்பு மனதிற்கு இதம். ஆனால் நடு இரவு அல்லது பின்னிரவு விழிப்பு ?
பின்னிரவு விழிப்பு ஏன் வருகிறது ? விரைவாய் உறங்கியதாலா ? அசதியில் உறங்கியதாலா ? பொதுவாக நான் இரவுக் குளியல் ஒன்று எடுத்துவிட்டு மட்டுமே தூக்கம் நோக்கி
Autograph என்பது என்னை பொறுத்த வரை, ஒரு வாழ்த்தும் வாய்ப்பு. என் கையெழுத்து என்பதை விட, என் எண்ணத்தை கொண்டு சேர்க்கும் கையெழுத்து என்று தான் நான் அதை கவனிக்கிறேன். 07. 2010 அன்று, என் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட Gopi என்கிற excellence க்கு, ‘ உள் உணர்தலே வெளி வளர்ச்சி ‘
ஒரு உலகம் இருக்கிறது. நகர்தல் அங்கு முக்கிய வாழ்க்கை. அந்த நகர்தலில் அங்கு ஜாதி மதம் மேல்நிலை கீழ்நிலை என்றெல்லாம் இல்லை. நகர்தல் என்றால் நகர்தல் மட்டுமே.
இந்த நெடுஞ்சாலை தான் எவ்வளவு முக்கிய சாட்சி – வாழும் வாழ்க்கைக்கு. எவ்வளவு வாகனங்கள். எவ்வளவு மனிதர்கள். எவ்வளவு பயணங்கள். எவ்வளவு விபத்துக்கள். அவ்வளவையும் பார்த்துவிட்டு
சில நினைவுகள் எப்போதும் நமக்கருகில், தலையணை மந்திரம் போல் இருப்பை விவரித்துக்கொண்டே இருக்கும். அந்த நினைவுகளின் வேர், உடல் முழுக்க படர்வது, போர்வை தேவைப்படா அணைப்பு. நெஞ்சுக்கூட்டின், தேக்கப்பட்ட, குவிக்கப்பட்ட இளஞ்சூடு.
ஏன் நினைவுகள் நம்மை, மீண்டும் மீண்டும் வந்தடைகின்றன ? அவை எதிர்பார்ப்பது என்ன ? நினைவுகள் நம்மை அடையும் நேரம் பெரும்பாலும் தனிமை
நிலம் முடிவடையும்போது, நீர் துவங்கும். நீர் முடிவடையும்போது நிலம் துவங்கும். துவங்குதலே இங்கு முக்கியம். முடிவடைதல் அல்ல.
பொதுவாக Negativity என்று ஒரு வார்த்தை முடிவடைதலுடன் மட்டுமே தொடர்பாகிறது. ” எல்லாம் முடிஞ்சு போச்சு ” என்பது எதையோ இழப்பதையும், ” அதெல்லாம் ஒரு காலம் ” என்பது கைவிட்டு போன நிலையையும் குறிப்பதாக இருக்கிறது.
பெரும்பாலான பயணங்கள் ஆரம்பித்தோம் முடித்தோம் என்றுதான். ஆரம்பிக்கும்போதே, முடிக்கும் இடம் எப்போ வரும் என்ற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படும் பயணங்கள் பயணங்களே அல்ல. அவை இடமாற்றங்கள்.
கிராமத்து ஆளற்ற இருவழி ஒற்றை சாலை, பசுமை மரங்களால் முழுவதும் மூடப்பட்ட தூரத்து வட்டம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி… இரண்டும் என்னை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்தன. வாகனம்
பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, நேற்று இரவு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ( ஞாயிறு இரவு 10 மணி அளவில் ), tyre Puncture. சனிக்கிழமை நீண்ட பயணம், ஞாயிறு முழு நாள் பயிற்சி என்று இருந்ததில், உடல் அசதியோடு ‘ போய் படுக்கலாமே ‘ என்று சொல்லிக்கொண்டிருந்தது. எந்தக் கடையும் இல்லை என்பதால், என்ன










