சாலையோர பயணங்களில், ஒரு break தேவைப்படும். Monotonous என்று சொல்லப்படுகிற ஒரு வித இயலில் இருந்து வெளிவரவே அந்த break.
CCD பயணங்களில் ஒரு எழுதப்படா நிறுத்தம் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. ” காபி அங்கே நல்லா இருக்காதே ? விலையும் அதிகம் ? ” என்று சொல்பவர்களுக்கு .. CCD என்பது என்னை பொறுத்தவரை ஒரு
தீரா உலா என்றால் வாகனம் எடுத்து வெளியே செல்வது மட்டும் அல்ல … வெளியே செல்லும் அவ்வளவும்தான் !
பொதுவாக 05 மணி #slogging எனக்கு மிக பிடித்த விடயம். 06.45 க்கெல்லாம் உடற்பயிற்சி முடிந்து, 07 மணிக்கு உலகம் அசையத் தொடங்கும்போது … உடற்பயிற்சி முடித்து உலகம் காண்பவனாய் என் உலகம் இருக்கும். Fitness
மனிதர்கள் ஆச்சர்யமானவர்கள். எதை
தவறு என்று பேசுகிறார்களோ, அதையே சரி என்று சொல்லிக்கொள்கிறார்கள். எதை சரி என்று இப்போது பேசுகிறார்களோ, அதையே தவறு என்று எதிர்காலத்தில் ஒத்துக்கொள்கிறார்கள். இது காலத்தால் மாறுவது தான். நான் அதை சொல்லவில்லை. நான் சொல்வது வேறு. இப்போது சொல்லும் தவறு, இப்போது சொல்லும் சரி என்ற கருத்துக்களால் அவர்கள்
கள்ளக்குறிச்சியில், வீட்டில் இருந்து ஆரம்பித்த பயணம். சேலத்தில் வியாபார நிமித்தம் பேசி முடித்துவிட்டு, சென்னை கிளம்ப எத்தனித்த போது .. இரண்டு options கையில். ஒன்று சேலம் கள்ளக்குறிச்சி சென்னை வழி. இன்னொன்று சேலம் கிருஷ்ணகிரி சென்னை வழி. நேரம் கருதி, இரண்டாவதை தேர்ந்தெடுத்து பயணத்தை ஆரம்பித்தேன். அதிலும் கிருஷ்ணகிரி செல்வதை தவிர்த்து, தொப்பூரில் பிரிந்து
அந்த சிவப்பு போக்ஸ்வகன் போலோ கார், மெதுவாக வேகம் குறைந்து, இடப்பக்கம் மஞ்சள் indicator காண்பித்து, வெள்ளை கோட்டுக்குள் மென்மையாக நின்றது. ஜன்னல் கண்ணாடி கீழிறங்கி, கதவு திறந்து, black leather shoe அணிந்த ஒரு கால் வெளிவந்து, இன்னொரு காலையும் வெளி இழுத்தது. இறங்கிய பெண் சிரித்தாள். சராசரி உயரம். சிரித்த முகம். Black
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து நான் விலகி வந்து நீண்ட நாட்கள் ஆயிற்று. Accelerator ல் கால் வைத்தால் சென்று கொண்டே இருக்கலாம் என்கிற ஒரு வசதியை தவிர தேசிய நெடுஞ்சாலைகள் ( NH ) எனக்கொன்றும் பெரியதாக எதுவும் செய்ததில்லை. மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிற ஒரு தூரம், கிராம / சிறு
பொதுவாக ‘ எப்போதும் செல்லும் ‘ பாதைகளை தவிர்த்துவிட்டு புதிய பாதைகளை நான் தேர்ந்தெடுத்து செல்வதுண்டு. புதிய பாதைகளில் நிரந்தரமாய் இருக்கும் இருப்பு ‘தேடல்’. தேடுதல் என்பது எதற்காக ? எதை நோக்கி ? எதுவுமற்றா? என்ற கேள்விகளை தவிர்த்து விட்டு யோசித்தால்.. பொதுவாக வரும் பதில் மனிதர்களின் அருகாமை. தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் தொலைத்தது
புரிதல் என்பது உனக்கும் எனக்குமானது அல்ல. நமக்கும் நமக்குமானது. மீண்டும் சொல்கிறேன். நமக்கும் நமக்குமானது. உன் எதிர்காலத்திற்க்கும் என் எதிர்காலத்திற்குமானது அல்ல. நம் எதிர்காலத்திற்குமானது. தனியை பொதுவில் தொலைத்து வாழ்பவர்கள் நாம்.
நான், நீ வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ தொலைவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரும் ஆச்சர்யம். நான், நீ அழகுதான். அது நாமாக,
நேற்று Practitioner course காக, Live Program, Phoenix Mall ல் நடந்தது. Rathinavelu Muthu subramanian என்கிற Excellence ன் கற்றுக்கொள்ளும் பயணத்தின் இன்னொரு நிலை நேற்று தொடங்கியது. Phoneix Mall ஒரு தனி உலகம். கிட்டத்தட்ட ஒரு குளிரூட்டப்பட்ட, ஒளியூட்டப்பட்ட பெரு மனிதர்கள் வாழும் கிராமம் போல். பதினொன்று மணிக்கு ஆரம்பித்த வகுப்பு,
சிரிப்பு எல்லோருக்குமானது. எல்லோரின் முகத்திலும் ஒரு வசீகர சிரிப்பு கட்டாயம் இருக்கும். ஆனால் அந்த சிரிப்பின் பின் இருக்கும் காரணங்கள் பொதுவானவை அல்ல. அவை மகிழ்வான காரணங்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சிறு வயதில் ஒரு சிரிப்பு சட்டென வருகிறது. ஆனால் .. அனுபவம் வர வர.. சிரிப்பிற்கு ஒரு அசாத்திய புரிதல் தேவைப்படுகிறது.










