I Miss You என்று ஒரு வார்த்தை / வரி ஏற்படுத்தும் மகிழ்வலிக்கு ( மகிழ்வு plus வலி என்று தானே சொல்ல வேண்டும் ! ) இணை இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் மகிழ்வு அல்லது வெறும் வலி என்றால், அதுவும் ஒரு சராசரி வார்த்தையாக மாறி இருக்க கூடும். ஆனால் இரண்டும்
ஒரு உலகம் இருக்கிறது. அங்கே நிச்சயமாக நாம் நினைப்பதும், செய்வதும், பேசுவதும், உணர்வதும் சரி என்று தெரியும். மற்றவர்களும் அதை ஆமோதிப்பார்கள். ஆனாலும் ஒரு வரி வரும் .. ” பொறுமையா இரு “. அங்கே இருக்கிறது அந்த உலகத்தின் வேர். அப்படி என்னதான் அந்த பொறுமையில் இருக்கிறது ?
பொதுவாக நாம் பேசுவதற்கான உரிமைகள்
திடீரென்று, தான் ஒட்டி வந்த சைக்கிளை விட்டுவிட்டு.. என்னை நோக்கி ஓடிவந்தான் அவன். தங்கையின் மகன். நிதேஷ். முகம் பதட்டத்தில்.
” என்னடா ? ”
” நாய் மாமா. பயமா இருந்துச்சி. சைக்கிளை விட்டுட்டு ஓடி வந்திட்டேன். ”
அவனை கவனித்தேன். படபடப்பா இருந்தான். நாயை கவனித்தேன். வாலை ஆட்டிக்கொண்டு நின்றது.
” ஏன்
கடைசியாக எப்போது புது வழிகளில் பயணித்தீர்கள் ? அதே தெரிந்த வழிகளில் எப்படி உங்களால் பயணிக்க முடிகிறது – மீண்டும் மீண்டும் ?
ஒவ்வொரு பயணத்திலும் ஒரு புது வழி ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க முடியும். ” Even for few kilometers, there waits a New World ” என்று எங்கேயோ படித்த
80 களாகட்டும் .. 90 களாகட்டும்.. ராஜாவும் ரகுமானும்… தொட்ட பக்கங்களை இன்னும் யாரும் தொடவில்லை என்பதே பெரு உண்மை. சில பாடல்கள் இன்னும் என்னுடன் பயணித்து கொண்டே இருக்கின்றன. ‘ சிப்பி இருக்குது முத்தும் இருக்குது ‘ ஏற்படுத்தும் அதிர்வலைகள் அடங்க இந்த ஜென்மம் போதா. கமலும் ஸ்ரீதேவியும்… சில பாடல்களில் அவர்கள் வாழ்ந்தார்களோ
குழந்தைகள் போல் .. யதார்த்தத்தை பிரதிபலித்து வாழும் மனிதம் வேறு எதுவும் இல்லை. கோபமோ, பாசமோ, குழந்தைகள் உள்ளதை சொல்லிவிட்டு எப்போதும்போல் நம்மிடம் உறவாடுகின்றன. ஐந்து மாதமாக பேசவில்லை என்பெதெல்லாம் நம்மிடம் மட்டுமே. ஐந்து நிமிடங்களே குழந்தைகளுக்கு அதிகம்.
முதிர்ச்சி என்ற பெயரால் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் நாம் என்று யோசித்தால் நிறைய ஆச்சர்யங்கள் வரும் நமக்கு.
நோக்கம் சரியெனில், வழி தானாகவே அமையும். நோக்கம் பொது நன்மை சார்ந்தது எனில் … மனிதர்கள் தானாகவே அமைவார்கள். நோக்கம் தனி மனிதனின் சிறப்பான விஷயத்தை வெளிக்கொணரும் எனில் … சூழ்நிலைகளும் அதற்கு தக்கவாறு அமையும்.
பயணங்களில் planning மிகவும் முக்கியம் என்று சொல்பவர்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதை பயணம் அதாவது travel என்று
உலகம் அப்படித்தான் இயங்குகிறது. நீ எதை select செய்கிறாயோ அதுவாக ஆகிறாய். வீடு உன் select எனில் வீட்டின் தருணங்கள், அலுவலகம் உன் select எனில் அலுவலக தருணங்கள் .. Wandering உன் select என்றால் .. ஆங்காங்கே தன்னை பச்சை ஜன்னல் வழி எட்டிப்பார்க்கும் இயற்கையின் தருணங்கள் … அப்படித்தான் உலகம் இயங்குகிறது.
சரி..
நேற்று xylo வின் பயணத்தில் ஒரு சிறு பிரச்சினை. திடீரென்று வாகனத்தில் ஒரு உதறல். Joint bush மாற்ற வேண்டிய தேவை. ‘ஒரு மணி நேரத்தில் மாற்றி விடலாம் ‘ .. என்று mechanic சொன்ன போதும் மனசு ‘ minimum மூன்று மணி நேரம் ஆகிவிடும் ‘ என்று சொல்லியது. முதலில் நான் check
” Hair cut செய்துக்கலாமா ? ”
” அப்பா வரணும் சார். ”
” ஏம்பா .. நீ செய்ய மாட்டியா ? ”
” செய்வேன். நீங்க புது customer. அப்பான்னா சரியா இருக்கும் ” – முகம் முழுக்க உற்சாகம், புன்னகையுடன் ஹரிஹரன். 08 ஆம் வகுப்பு முடித்து 09 ஆம்










