நீண்ட நாளைக்கு பின் திடீரென்று தோன்றிய ஒரு வினாடி சிந்தனை என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ” சர்ச்சுக்கு செல்ல வேண்டும் “.
ஐந்தாம் வகுப்பு வரை Danish Mission பள்ளியில் படித்தபோது தான் சர்ச் எனக்கு முதலில் அறிமுகமானது. சர்ச்சின் உயரம் தான் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அந்த உயரத்தின் மேல்புறம் தெரியும்
எனக்கு என்னை மிகவும் பிடித்த தருணமாக இருக்கும் தருணங்களில் ஒன்று நான் எவ்வித ஒப்பனையும் இன்றி நானாக இருப்பது. கன்னங்களில் வளர்ந்த தாடி எனப்படும் கேசம், வண்ணம் தீட்டப்படாமல் இருப்பதில் என் இயல்புத் தன்மை தொடங்குவதை நான் உணர்கிறேன். வண்ணம் தீட்டிய காலகட்டங்களில் கிடைக்கும் ஒரு செயற்கை ‘அட’ அழகை இந்த உலகம் விரும்புவதை கண்டு
” இந்த உலகம் ஒரு வேகமான பாதுகாப்பற்ற உணர்விலேயே இயங்குகிறதோ என எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது ” – என் நண்பரின் குரல்.
” ஏன் அப்படி ” நான் மென்சிரிப்புடன் கேட்டேன்.
” பள்ளியில் படிக்கும்போது மருத்துவப் படிப்பு முதன்மையாக காண்பிக்கபடுகிறது. கல்லூரியில் படிக்கும்போது ஐந்து இலக்க ஆரம்ப சம்பளம் சொல்லப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பின் அவளை சந்தித்த போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பமும் நுரையாய் எழுந்தது. அவளும் என்னை கவனித்து விட்டாள். அநேகமாய் அவளுக்குள்ளும் அதே குழப்பங்கள் இருக்க கூடும்.
கல்லூரி நாட்களில் அவள் பலரின் கதாநாயகி. படிப்பு, திறமை, அழகு, அமைதி, கொஞ்சம் நகைச்சுவை என எல்லாம்
மனிதர்களை நான் மன்னிக்கிறேன். தினம் தினம். அப்படி மன்னித்த ஒருவரை சில வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது. அவர் பேச ஆரம்பித்தார் …
” பேசுவாயோ மாட்டாயோ என்று நினைத்து இருந்தேன். பரவாயில்லை பேசுகிறாய். நான் அப்போது செய்தது தவறுதான். அதை இப்போது உணர்கிறேன். ” என்று
பேச்சு நகர்ந்தது.
நான் சிரித்துவிட்டு தொடர்ந்தேன் …
சரி. அவனுக்கும் அவளுக்கும் சரி வரவில்லை. என்ன செய்யலாம் ? முதலில் அவன் செய்வது என்ன என்று கவனிப்போம்.
அவளை எதிரியாக பார்க்க ஆரம்பிப்பான். 10 /15 / 20 வருடங்கள் உடன் இருந்தவள் என்பது எல்லாம் திடீர் என்று மரத்து, மறந்து போகும் அந்த அவனுக்கு. அவளை வீட்டிற்குள் முடக்கும் அத்தனை செயல்களையும் செய்ய
கொஞ்சம் யோசிப்போம்.
தெரியாத மாதிரி நடிக்கும் ஆண்கள், இதை படிப்பதில் இருந்தே விலகி விடலாம். படித்த பின் மனதிற்குள் ” என்னை மன்னிக்கவும் “என்று சொன்னால் .. #metoo கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கும்.
1. ” பெண் என்பவள் ஒரு போகப்பொருள் ” என்று அவளை பார்ப்பதில் இருந்தே .. பெண்களின் #metoo வலி ஆரம்பமாகிறது.
அவளுக்கு ஒரு சந்தேகம். ஒரு கேள்வி. ஒரு குழப்பம். ஒரு தெளிவற்ற நிலை. அவனிடம் கேட்பாள். அவன் உலக business க்கும் அரசியலுக்கும் அறிவுரை சொல்பவன். ஆனால் அவளின் நியாயமான குழப்பங்கள் அவனுக்கு எரிச்சல் வரும். அவனால் அவளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. தடுமாறுவான். அவனுக்கு உலகம் பேச வேண்டும். ஏன் தெரியுமா
அவன் சத்தமாய் பேசிவிட்டு செல்வான். அவள் அமைதியாய் இருப்பாள். அவனின் சத்தம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும். அவள் அப்போதும் அமைதியாக இருப்பாள். முகத்தை காட்டிவிட்டு, சத்தமாய் பேசிவிட்டு வெளியேறுவான் அவன். அவள் இன்னமும் மௌனமாக இருப்பாள். கதவை மூடிவிட்டு யாருமற்ற அந்த வீட்டில் மௌனமாக அழுவாள். ஆம் .. அங்கும் அவளுக்கு சத்தம் வந்துவிட கூடாது
“உங்களின் திறமையை பாராட்டுகிறோம் ” கேட்கும் அவனுக்கு இருப்பு கொள்ளாது. அவளை அல்லவா பாராட்டுகிறார்கள் !? அவள் வாங்கும் கோப்பைகளுக்குள் அவன் எப்போதுமே விழுந்துவிடுவான். எழ சிரமப்படுவான். அவளை அடையும் பாராட்டுக்களை பொதுவாய் ‘ கடு கடு ‘ முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான். போதாதற்கு … கொஞ்சம் Plastic smile வேறு அந்த எள்ளும் கொள்ளும் வெடிக்கும்