தெரிந்ததும், தெரியாததும் :
ஒரு உணவு விடுதிக்கு செல்கிறோம். உணவு இன்ன இன்னது வேண்டும் என்று சொல்கிறோம். உண்கிறோம். மகிழ்கிறோம். திரும்பி விடுகிறோம். அதையும் கடந்து …
அந்த உணவு விடுதியின் சுவற்றில், ஓவியங்கள் அழகாய் வரையப்பட்டு இருந்தால், ஒவ்வொரு ஓவியமும் உயிர் பெற்று உங்களுடன் பேச ஆரம்பித்தால், ஒரு ஓவியத்தை புகைப்படம்
ஏதோ Beach : காலையில் #slogging ECR இல் செய்ய ஆரம்பிக்க, 10000 steps முடித்தவுடன், கண்ணில் பட்ட ஒரு ஏதோ Beach நோக்கி கால்கள் நடக்க ஆரம்பித்தன. பொதுவாக beach என்றாலே ” அந்த beach ” ” இந்த beach ” என்று பெயரிடப்பட்டு, தன் அடையாளம் இழந்த, வியாபார மயமான
மதுரையில் / சேலத்தில் இருந்து வருகிறீர்கள். OMR செல்ல வேண்டும் என்றால் .. பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பாதை தாம்பரம் – வேளச்சேரி – OMR வழி. ஆனால் இனி .. அப்படி தேவை இல்லை. செங்கல்பட்டில் இருந்து, திருப்போரூர் செல்லும் வழியை தேர்ந்தெடுத்தால் …ஒரு 40 நிமிடங்களில் OMR செல்ல
Tso Kar :
லடாக் பகுதியை உலகின் சொர்க்கம் என்று பெயரிடலாம். பனி போர்த்தி நிற்கும் மௌன தலைகீழ் V மலைகளின் இடைவெளியில் இருக்கும் ஒரு ஏரி போதும் .. ஒரு நாள் முழுக்க மௌனமாக அமர்ந்து இருக்க. இளைப்பாற. இதம் பெற. இதயம் பெற. 15000 அடியில் ஒரு ஏரி அமைதியாகி, எதிரே தெரிவதை
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் கண்ட இந்த காட்சி ஏற்படுத்தும் அதிர்வுகள் பல. அவற்றில் பிரதிபலிப்புகள் சொல்லும் பாடங்கள் இங்கு பகிரப்பட வேண்டியவை. பொதுவாக இந்த சாலையில் கண் கொள்ளா காட்சிகள் பல உண்டு.
*
நீரின் அமைதியே பிரதிபலிப்பின் வேர். நீர் அமைதியாய் இல்லை எனில் பிரதிபலிப்பு என்று ஒன்று இருக்கும் ஆனால்
படித்து, வேலைக்கு சேர்ந்து, காசு பார்க்க ஆரம்பித்தாயிற்று. எப்படியாவது ஒரு car வாங்கவேண்டும் .. வாங்கியாயிற்று. எப்படியாவது ஒரு இடம் வாங்கவேண்டும் .. சரி வாங்கியாயிற்று.. எப்படியாவது ஒரு வீடு கட்ட வேண்டும் .. சரி கட்டியாயிற்று. இன்னும் ஒரு இடம் வாங்கி, இன்னும் ஒரு வீடு கட்டி, வாடகைக்கு விட்டு .. சரி செய்தாயிற்று.
பத்மநாதபுரம் அரண்மனை கொஞ்சம் வித்தியாசமானது. வேறு வேறு கோணங்களில் ஒரே காட்சி அழகாக மாறிவிடும். மேற்கூரை அமைப்பும், ஜன்னல் வழி வரும் வெளிச்சமும், நான்கு பக்க ஒடு வரிசைகளுக்கு மத்தியில் தெரியும் செவ்வக இடைவெளியும், மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்களும்… என்று அந்த அரண்மனை வித்தியாச உலகம். புகைப்படம் எடுக்க வேண்டும் எனில், ஒரு நாள் தேவைப்படும்.
காசியின் படிக்கட்டுகள் பல கதைகள் பார்த்தவை. இருந்த உடல்கள், இறந்த உடல்களை தூக்கிக்கொண்டு நகர்வதை அமைதியாக பார்ப்பவை. மகனை பிரிந்த பெற்றோர், அழும் கண்ணீரை அமைதியாக வாங்குபவை. மகளை பறிகொடுத்த அப்பா, சொல்லமுடியாமல் சொல்வதை கேட்பவை. வயதான தன் தாயை கங்கைக்கு பத்திரமாக அழைத்து வந்து, அவள் சொல்லும் வாழ்த்தை கண் மூடி வாங்கும் மகன்
” பள்ளத்தை
தனக்காக்கி
கொள்ளும்
மவுன நீர்
பசுமையை
உயரமாக்கி
பிரதிபலிக்கும்
அழகாய்
இரு மடங்காய் ! ”
தன்னை பிரதிபலிக்கும் நீரில் முகம் பார்த்து, இங்கும் அங்கும் நகர்ந்து .. முகத்தை சரி செய்துகொண்டிருந்தன கரு மேகங்கள். மேகங்கள் எப்போதும் அப்படித்தான். அவை நகர்வதே நீர் நிலைகளை நோக்கி. முகம் அழகு என்று உணர்ந்ததும்