எனை redesign செய்யும் நினைவுப்பரிசுகள் :
நினைவுப்பரிசுகள் அலங்கார தோரணைகள் அல்ல. அவைகளுக்கு என்று சில intent இருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு weighing machine ஒன்றை அளித்தார். அப்போது நான் கொஞ்சம் weight add ஆன கால கட்டம். அவர் எனக்கு மறைமுகமாக சொல்ல நினைத்ததை அந்த பரிசு வெளிப்படையாக பேசியது.
இன்னொரு
காத்திருக்கும் பாதைகள் :
பாதைகளை கவனித்து இருக்கிறீர்களா ? அமைதியாக அவை தன் இருப்பை வைத்துக்கொள்கின்றன. மரங்களை இரு பக்கமும் தள்ளி வைத்துவிட்டு, தன் மௌனத்தை அதன் ஆதரவாக சொல்லி வாழ்கின்றன. சத்தமற்ற அவற்றின் இருப்பில் சில நினைவுகளை நான் கோர்க்கிறேன் – இங்கு.
ஒரு முறை இமயமலை பகுதியில் காலை நேர நடையில் ஒரு
ஆம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வி inbox ல் வருவதால்…
கொஞ்சம் என்னைப்பற்றி:
NLP TRainer. கார்ப்பரேட் உலகின், தொழிற்சாலைகளின், குடும்பங்களின், தனி மனித உலகின் .. பயிற்சிகளில் என் பெயர் ஆங்காங்கே ஒலிக்கக்கூடும். இருபது வருடங்கள் இந்தியா முழுக்க பயணம். ” ஓடும் நதியும், நிற்கும் குளமும் கொண்டிருப்பது வேறு வேறு நீர் ”
என் நட்பு வட்டாரம் என்னுடன் பயணித்து கொண்டே இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அந்த நட்பு வட்டாரங்களின் எதிர்பார்ப்பு தேடல் என் பயணங்களில் இருந்து அவர்களுக்கு கிடைப்பதை நான் உணருகிறேன்.
நிறைய நட்புக்களின் முதல் கேள்வி
” என்று உங்களுடன் நான் பயணிப்பது “என்பதே. என் முதல் பதில் ‘எப்போது வேண்டுமானாலும்’. பயணங்களை போல் ஒரு உருவமற்ற
முதல் முதலாக புகைப்படம் எடுத்த போது, என் நண்பன் சொன்னான் … ” சரியா எடுக்கலைடா நீ ? பாதி முகம்தான் இருக்கு. மீதியை காணோம் ? ” … அப்போதுதான் புகைப்படம் என்று ஒன்றை பார்த்தேன். அதற்க்கு முன் வரை புகைப்பட கருவியை உபயோகிப்பதே பெரிய சாதனையாக நான் நினைத்திருந்தேன். புகைப்படங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
என்னிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்வி … ” எப்படி இந்த பயிற்சியாளர் துறையை தேர்ந்து எடுத்தீர்கள் ? “
அப்பாவிற்கு முதல் கைதட்டல். கல்கண்டு, அம்புலிமாமா… வாங்கி கொடுத்து படிக்க சொல்லியபின், மெதுவாக என்னை நூலகத்திற்கு இழுத்து சென்ற மனிதர். அங்கிருந்து நான் புத்தக வில்லைகளால் உலகம் படிக்க ஆரம்பித்தேன். கள்ளக்குறிச்சியின் நூலகத்திற்கு, அத்துணை நன்றிகளும்.
வாழ்க்கையின் விதிகள் நிறைய பேருக்கு புரிவதில்லை. வெற்றி பெற்றதாகவும், தோல்வி பெற்றதாகவும் நினைத்துக்கொண்டு, சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வாழும் பலரை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அந்த மனிதரின் பேச்சு அப்படி இனிப்பாக இருந்தது. எங்கோ நடிக்கிறார் என தெரிந்தாலும், நோக்கத்தின் நன்மை கருதி அவருடன் பயணிக்க தயாரானேன். சில மாதங்களில் அவர் தன் முகத்திற்கு பூசிக்கொண்ட சாயம்
உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்கிற என் எண்ணத்திற்கு மாற்று இல்லை. ஆனால் …
பயணங்களின் போது உணவும் உடற்பயிற்சியும் கடை பிடிக்க முடியாமல் போவது எனக்கு மிகவும் வருத்தமான விஷயம். கடைசி ஏழு நாட்களில் ஆறு விருந்து அழைப்புகள். தவிர்க்க முடியவில்லை. உடலா, அன்பா, மறுப்பா, ஆரோக்கியமா, நழுவலா . என்ற கேள்களுக்கு
நீண்ட நாளைக்கு பின் திடீரென்று தோன்றிய ஒரு வினாடி சிந்தனை என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ” சர்ச்சுக்கு செல்ல வேண்டும் “.
ஐந்தாம் வகுப்பு வரை Danish Mission பள்ளியில் படித்தபோது தான் சர்ச் எனக்கு முதலில் அறிமுகமானது. சர்ச்சின் உயரம் தான் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அந்த உயரத்தின் மேல்புறம் தெரியும்
எனக்கு என்னை மிகவும் பிடித்த தருணமாக இருக்கும் தருணங்களில் ஒன்று நான் எவ்வித ஒப்பனையும் இன்றி நானாக இருப்பது. கன்னங்களில் வளர்ந்த தாடி எனப்படும் கேசம், வண்ணம் தீட்டப்படாமல் இருப்பதில் என் இயல்புத் தன்மை தொடங்குவதை நான் உணர்கிறேன். வண்ணம் தீட்டிய காலகட்டங்களில் கிடைக்கும் ஒரு செயற்கை ‘அட’ அழகை இந்த உலகம் விரும்புவதை கண்டு