READ MY E-BOOKS
A few of my books for a good read...
இயற்கையை இணைத்துக்கொண்டதால் இருபுறமும் மகிழும் இந்த கால பயணி நான்.
ஒரு நல்ல பயிற்சியாளன் முதலில் வில்லனாக பார்க்கப்படுவான் - என்பது இதுவரை நான் படித்த யதார்த்தம். கடைசியில் அவனுக்கு குரு, ஒளி, வெளி... என்றெல்லாம் பெயரிடப்படுவதையும் கவனிக்கிறேன். இது எதிலும் என்னை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. என்னை கொண்டு செல்லவும் முடியாது. அது என் பலம்.
பேசும் இயற்கை - எனது புகைப்படங்கள் மற்றும் கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. பேசும் மனம் எழுதிய பின், புகைப்படங்கள் மூலம் நான் நினைப்பதை சொல்ல வேண்டும் என்று யோசித்த போது .. இயற்கை சொல்வதாக யோசித்தால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் பேசும் இயற்கை ஆரம்பித்தது.
சில நேரங்களில் மனம் பேசிவிட்டு அமைதியாகி விடும். பெரும்பாலும் இந்த அமைதி, மனம் பேசியதை நாம் கேட்காததால் ஏற்படும் அல்லது கேட்பதால் ஏற்படும். மனம் பேசுவதை கேட்பது என்பது நம்மில் எத்துணை பேருக்குள் நடக்கிறது என்பது கேள்விக்குறியே. மனதிற்கு புத்தி சொல்லும் மனிதர்களே இங்கு அதிகம். இப்படி ஒரு சூழ்நிலையில், அந்த மனதை முழுவதுமாக பேச விட்டால் என்னதான் சொல்கிறது என்று கவனிப்போம் என நான் முடிவெடுத்த போது பேசியவைதான் இந்த " பேசும் மனம் ".
நான் சென்ற பயணங்களின் பதிவுகளும் எனது அனுபவங்களும் ...
ஒவ்வொரு பக்கமாய் புத்தகம் எனக்குள் வலம் வருகிறது ... மீண்டும் மீண்டும் நான் 'கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது' என்கிற நினைப்பிற்குள் நகர்கிறேன் !
" பார்வைகள் புரியும்போது பேச்சுகள் மௌனமாவது இயற்கை. " நட்புகளில் உறவை போல் நீண்ட கால தொடர்புகள் அபூர்வம் !
ஏழு நாட்கள். இன்னொரு இந்தியா. முகமூடியற்ற வாழ்வு. பயணம் ஆரம்பம். எல்லோருக்கும் ஒரு அலைவரிசை இருக்கிறது. அந்த அலைவரிசை merge ஆகும்போது .. ஆரம்பிக்கும் புள்ளியே பயணம். புள்ளி தொடராவது இயற்கையின் கையில்.
தீரா உலா 001 - ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் இருக்கின்றன. ஆனாலும் 002 ஆரம்பம். பயணங்கள் நம்மை கவர்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒரு பயணம் ... மனிதர்கள், கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம் .. எல்லாவற்றையும் மாற்றிவிட்டு, நம்மை " என்ன " என்று கேள்வி கேட்கும்.
" 10K ஆரம்பித்த நாள் முதல், இன்று வரை தினசரி பதிவுகளை இங்கே ஒரு தொகுப்பாக அளிக்கிறேன். ஆரம்பத்தில் நடையில் இருந்த வேகம், பின் எப்படி மெது ஓட்டத்தை நோக்கி நகர்ந்தது என்பதை ஒவ்வொரு Chapter ஆக படிக்க படிக்க புரிய ஆரம்பிக்கும். கற்றல் இங்கு பதிவுகளாக "
அன்றாட பகிர்தல் என்பது எம் நடையுடன் கலந்து வரும் நிகழ்வாகும். வெறுமனே நடந்து விட்டு, எண்ணை பதிவு செய்ய நான் இயந்திரமும் அல்ல. இந்த space Robot களின் laboratory யும் அல்ல. நம்மை சுற்றி நடப்பவற்றை, நாம் சந்திக்கும் மனிதர்களை, கேட்கும் பாடல்களை, எண்ண ஓட்டங்களை .. பதியாத ஒரு நடை / ஓட்டம் / மென் ஓட்டம் .. என்ன ஒரு பதிவு என்று எனக்கு தோன்றும். ( 10 K வுக்கு அல்ல .. எனக்கு ! )